எங்கள் கூட்டாளி
சி ப்பி ப்ரிஸம் என்பது சென்னை ஃபோட்டோ பையன்னியல் சி ப்பி பியின் பயிற்சித் துறை ஆகும். ஆர்வமும் சுய உணர்ச்சி வெளிப்பாடுகள் உடைய ஒரு சமூகத்தை அது ஊக்குவிக்கிறது. ஊடகங்களையும் காட்சிக் களங்களையும் ஊக்குவிப்பாதை அடிப்படையாகக் கொண்ட அவர்களின் விருப்பம் எல்லாக் குரல்களையும் கேட்கப்படச் செய்வது; விழிப்புணர்வு மிக்கதொரு சமூகத்தை உருவாக்குவது; நேர்மறையான மாற்றங்களை விரைவுபடுத்துவது ஆகியவையே ஆகும்.
இந்த ஆண்டு கோதே நிலையத்துடனான அவர்களது கூட்டு முயற்சியில் அவர்களின் ஆய்வுக் கரு “ஆண்மை” என்பதாகும். இந்த ஆய்விற்கான முதல் பயிற்சிப் பட்டறை கோவில்பட்டியில் உள்ள மணல்மேடு தியேட்டர்லேண்டில் நடைபெற்றது. அதன் நோக்கம் 11 வயதிலிருந்து 15 வயதுக்கு உட்பட்ட பதின்பருவத்தினருடன் ஆண்மை, பாலினங்களின் பங்கு ஆகியவை பற்றி ஆராய்வதே ஆகும். அந்தப் பயிற்சிப் பட்டறையைப் பற்றிய வலைப்பூ (Blog) ஒன்றையும் காணொளிக் காட்சி ஒன்றையும் நீங்கள் இங்கே காணலாம்.
தற்போது இந்த ஆராய்ச்சியில் மேலும் ஆழ்ந்து கல்வியாளர்களுக்கான ஒரு கையேட்டினை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். இது 10 வயதுக்கு மேற்பட்ட பதின்பருவத்தினருடன் புகைப்படக் கலையின் மூலம் எண்ணத் தூண்டல்கள், வார்ப்புகள், மேலும் “ஆண்மை” பற்றித் தொன்றுதொட்டு நிலவி வரும் கருத்தாக்கங்கள் பலவற்றையும் ஆய்வுப் பொருளாகக் கொண்டதாக இருக்கும். இந்த 12 வார நிகழ்வில் பதின்பருவத்தினர் “உண்மையான ஆண்” என்பதன் பொருள் என்ன என்பதைப் பற்றிய கேள்விகளை எழுப்ப ஊக்குவிக்கப்படுவர். எடுத்துக்காட்டான வகையில் பதின்பருவத்தினர் ஆணாதிக்கத்தால் வடிவமைக்கப்பட்ட சமூகத்தின் குறிக்கோள்களைப் பற்றிய கேள்விகளையும் எழுப்பலாம். இதன் முலம் அவர்கள் ஆரோக்யமான ௨றவுகளின் பாதையில் செல்ல முயலுவார்கள்.
இவர்களது முயற்சிகள் குறித்து நீங்கள் மேலும் அறிந்து கொள்வதற்கான இணைப்பு இதோ.
பயிற்சிப் பட்டறை, செயல்பாடுகள் ஆகிய நிகழ்வுகளை எங்களது
Instagram, Facebook, Twitter ஆகியவற்றில் பதிவுகளின் மூலம் இணைத்து கொள்ளுங்கள்.