
இணையத்தில் ஆலோசனையானது இளைஞருக்கான குடியகல்வு ஆலோசனை மையத்தின் (JMD) ஓர் சலுகையாகும். நீங்கள் இங்கு இணையத்தில் ஆலோசகர்களிடம் உங்கள் வினாக்களைச்சமர்ப்பிக்கலாம். இந்த ஆலோசகர் குழுவானது அநேகமான வருடங்கள் குடிபெயர்ந்தோருக்கான ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள். இவர்கள் சகல விதமான கேள்விகளுக்கும் அதாவது ஜேர்மனியில் வாழ்க்கை சம்பந்தமாக அல்லது ஏதாவது உங்களுக்கு பிரச்சனையாயின் அவற்றிற்கும் பதிலளிப்பார்கள். உதாரணமாக 'நான் எங்கே எனது சாரதி அனுமதிப்பத்திரத்தைப்பெற முடியும்? ஜேர்மனியில் எவ்வித தொழிலை நான் செய்யலாம்? எனக்கு ஓர் சட்டத்தரணி தேவை ,அதற்கு நான் என்ன செய்யலாம்?
இந்த ஆலோசனைகள் அநாமதேயமானவை, பலமொழிகளில் காணப்படுபவை மற்றும் இலவசமானது இந்த ஆலோசனை இணையத்தளமானது www.jmd4you.de தற்போது ஜேர்மன் மொழி,ரஸ்ஸிய மொழி மற்றும் துருக்கிமொழிகளில் காணப்படுகிறது.
www.jmd4you.de
இது இவ்வாறே தொழிற்படுகிறது:
இணையத்தில் நீங்கள் செல்லும் போது இவ்வாறு தோற்றமளிக்கிறது:
Log in ஐ கிளிக் செய்து ,நீங்கள் உங்களை பதிவு செய்து கொள்ளலாம். பின் ' " Neue Erstanfrage ஐ கிளிக் செய்யவும் ,இது நீங்கள் உங்கள் கேள்வியை தயார்படுத்திக்கொள்ள உதவுகிறது.
உங்கள் கேள்வியை பெட்டியில் எழுதுங்கள். கீழே நீங்கள் மாதிரி கேள்விகளைக் காண்பீர்கள். உங்கள் கேள்வியை உருவாக்க இவை உதவும்:
இறுதியாக உங்கள் வினாவை அனுப்பி விட்டீர்களா? அப்படியாயின் 24 மணித்தியாலத்திற்குள் அதற்கான விடை உங்களுக்கு கிடைக்கும். உங்களது மின்னஞ்சலில் இதற்கான பதில் கிடைக்கவில்லையாயின் , மீண்டும் இணையத்தில் பிரவேசித்து,Mein JMD ஐ கிளிக் செய்யவும். அங்கு உங்களது வினாவும் விடையும் இருக்கும்.
உங்களது வினாவுக்கான விடையை JMD இணையத்தளத்தில் மட்டுமே நீங்கள் வாசிக்க முடியும். இது நம்பகமானதும் ,அநாமதேயமானதும் ஆகும். யாரும் உங்களது வினாவையும் விடையையும் பார்க்கப்போவது இல்லை. நீங்களும் உங்களது ஆலோசனையாளரும் மட்டுமே இதைப்பார்க்கலாம்.
JMD இன் இணையத்துடனான ஆலோசனைகளுக்கு உங்களது வினாக்களை "Forum ' த்திலும் பிரசுரிக்கலாம். ஆனால் அது அநாமதேயமானதல்ல. இதனூடாக மற்றைய குடிபெயர்ந்தோர்களிடமும் உரையாடலாம். எல்லோரும் வினாக்களையும் ,விடைகளையும் வாசிக்கலாம்.
கேள்வி பதில் பக்கமானது புதியது. இங்கே அதிகபட்ச வினாவுக்கான விடையை நீங்கள் பார்க்கலாம். ஒரு சில வினாக்களை இதன் தலைப்பாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
www.jmd4you.de