Ansicht auf eine sommerliche Party auf einer Wiese mit vielen Menschen, Essensständen und Dekoration © Goethe-Institut

அகதி அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு

பொழுதுபோக்காக நீங்கள் என்ன செய்யலாம்? நகரத்தில் அநேகமான அம்சங்கள் உள்ளன.

கலாச்சாரம்

நீங்கள் கலாச்சாரத்தை விரும்புபவரா? அநேகமான நகரங்களில் நூதனசாலை , திரையரங்குகள், நாடகமேடை மற்றும் களியாட்ட அரங்குகள் என்பன உள்ளன. எப்போதும் அநேக திரையரங்குகள் சர்வதேச திரைப்படங்களை அதன் உண்மையான தோற்றத்துடன் திரையிடுகின்றன . நூலகங்களில் அல்லது நகரங்களிலுள்ள புத்தகசாலைகளில் கட்டணமின்றி அல்லது குறைந்தளவு பணத்திற்கு புத்தகங்களை வாசிக்கலாம், இசையைக்கேட்கலாம் மற்றும் திரைப்படங்களைப்பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் புத்தகங்கள் , திரப்படங்கள் மற்றும் CDக்களை வாடகைக்குப்பெற்றுக்கொள்ளலாம். இவற்றை வீட்டிற்கு எடுத்துச்சென்று பின்னர் மீண்டும் அவற்றை ஒப்படைக்கலாம்.

Ansicht auf die Vorderseite der Münchner Staatsoper © Goethe-Institut

வளர்ந்தோருக்கான கற்றல் நிலயங்கள், நிறுவனங்கள் மற்றும் கழகங்கள்.

அநேகமான இடங்களில் வளர்ந்தோருக்கான கற்றல் நிலையங்கள் உள்ளன. முக்கியமாக இங்கு வளர்ந்தோருக்கான கற்கை நெறிகள் உள்ளன. உதாரணமாக நடனவகுப்புக்கள் அல்லது மொழிப்பயிற்சி வகுப்புக்கள். கீழேயுள்ள இணையத்தள முகவரி ஊடாக உங்களுக்கு அருகாமையிலுள்ள வளர்ந்தோருக்கான கற்றல் நிலையங்களைக்கண்டுகொள்ளலாம்.
Volkshochschule

பெரும்பான்மையாக இலவசநிகழ்வுகள்  பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்காக உண்டு. உதாரணமாக சில நகரங்களில் பிள்ளைகளுக்கான விளையாட்டுக்குழுக்கள் உள்ளன.  உங்களுக்கு விளையாட்டு பிடிக்குமா? வளர்ந்தோருக்கான பயிற்சி நிலையங்களிலும் விளையாட்டுப்பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. அல்லது நீங்கள் பொது நீச்சல் தடகத்திற்கு அல்லது விளையாட்டுக்கழகத்திற்கு செல்லலாம்.
 
இன்னுமொரு சாத்தியமான  விடயம் கழகங்கள் ஆகும். ஓர் கழகத்தில் அநேகமானோர் ஒத்த விருப்புடைய பொழுதுபோக்கு அம்சத்தை அல்லது நோக்கைக்கொண்டிருப்பர். உதாரணமாக இசைக்கழகங்கள் ,விளையாட்டுக்கழகங்கள் ,சமையல்கழகங்கள் அல்லது கணிணிக்கழகங்கள் ஆகும். இத்தகைய கழகங்கள் வளர்ந்தோர் மற்றும் இளவயதினருக்காக உள்ளது.


Ansicht auf einen Barausschank,links steht ein lachender Barkeeper. Viele Aufkleber und die Farbgestaltung weisen auf den FC Bayern hin. © Goethe-Institut

 
பூங்காக்கள் மற்றும் இயற்கை

உங்களுக்கு வெளியில் இருக்கப்பிடிக்குமா? ஒவ்வொரு நகரத்திலும் பூங்காக்கள் உள்ளன. பிள்ளைகளுக்காக அதிகளவிலான  விளையாட்டு இடங்கள் உள்ளன. அநேகமாக இங்கு உலாவுவதற்கு கட்டணம் தேவையில்லை. தாவரவியல் பூங்காக்களில் விசேடமான தாவரங்களைக்காணலாம். உலகெங்கிலுமுள்ள மிருக இனங்களை மிருகக்காட்சிச்சாலையில் காணலாம். தாவரவியல் பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிச்சாலைகளில் சிறியளவு கட்டணம் அறவிடப்படும். இதைத்தவிர பெரும்பான்மையான பிராந்தியங்களில் கடல்கள், காடுகள் அல்லது மலைகள் என்பன உண்டு. சில வேளைகளில் நீங்கள் கடற்கரைக்கு அருகில் வசிக்கவும் கூடும்.

வீட்டில்

வீட்டில் அநேகமானோர் தொலைக்காட்சியைப்பார்ப்பதிலும் வானோலியைக்கேட்பதிலுமே நேரத்தைச்செலவிடுகின்றனர்.

ஒவ்வொரு வீடும் தமது வானொலி மற்றும் தொலைக்காட்சியை புஏணு இல் பதிவு செய்து அதற்கான மாதாந்தக்கட்டணத்தைச்செலுத்துகின்றனர். தற்போது இது மாதாந்தம் 17.98 யூரோ ஆகும். உங்களுக்கு அதிகளவு பணம் இல்லையாயின்  நீங்கள் இதை செலுத்தத்தேவையில்லை.

உங்களது கட்டிடத்தில் சிறுமுற்றம் அல்லது பல்கனி இருப்பின்  சில விடயங்களை நீங்கள் எப்போதும் செய்யமுடியாது. உதாரணமாக பல்கனியில் எப்பொதும் நீங்கள் பாபிகூ (BBQ) செய்ய முடியாது. வீட்டிற்கான விதிமுறைகளை அதன் தகவல் பட்டியலைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
உள்ளுரில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களைப்பற்றி அறிந்து கொள்ள உங்கள் நகர அல்லது சமூக இணையத்தளத்தைப்பார்வையிடவும்.


Ansicht auf einen See mit Bergpanorama im Hintergrund. Aus der Vogelperspektive sieht man im Vordergrund Wanderer. © Goethe-Institut

அகதி அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு

Sports

You can do sports almost anywhere in Germany. There are many sports clubs and also gyms. Even small villages have clubs that offer a large variety of sports. Popular sports, for example, are football, volleyball, dancing and many more. Against a membership fee, you are allowed to train at the club.

Football is particularly popular in Germany. However, you can also play football without joining a club. People just meet outside on a lawn or in park to play football. The Federal Office for Migration and Refugees (BAMF) provides more information on sports and clubs at the following websites:

Other Leisure Activities

Many public institutions offer special leisure programmes for adolescents and adults. Do you enjoy reading? If you do, you can visit a public library. Many libraries offer special programmes for refugees. More information on many other leisure activities can be obtained from migration advice centres, sports clubs and charitable organisations in your neighbourhood.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.

படிவத்தை தொடர்பு கொள்ள