
வேலை அனுமதிப்பத்திரம்
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய வர்த்தக பரப்பிற்கு அப்பாற்பட்டு வந்தவரா? அப்படியானால் உங்களுக்கு தொழில் செய்வதற்கு ஜேர்மனியில் அனுமதிப்பத்திரம் தேவை. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் ரோமானியா மற்றும் பல்காரியாவைச் சேர்ந்தவர்களுக்கு 2013 இறுதிவரைக்கும் தொழில் அனுமதிப்பத்திரம் தேவைப்பட்டது. அதன் பிற்பாடு இல்லை. உங்களுக்கு ஜேர்மனியில் தொழிலுக்கான அனுமதி உண்டா, அது எவ்வளவு காலம், என்பன உங்களது வதிவிட அனுமதிப்பத்திரத்தில் காட்டப்பட்டுள்ளது.
சான்றிதழ் மற்றும் இணக்கம்
உங்களுக்கு உங்கள் நாட்டிலிருந்து தொழில்சார் தகமைகள், பல்கலைக்கழக பட்டப்படிப்பு அல்லது பாடசாலை விலகல் பத்திரம் போன்றன உள்ளனவா? நீங்கள் அவற்றை மொழிபெயர்த்து உறுதிப்படுத்திருக்க வேண்டும். உறுதிப்படுத்தல் என்பது உத்தியோகபூர்வமாக உங்களது சான்றிதழ்கள் பரிசீலணை பண்ணப்படும். இதற்கான சரியான இடம் உங்களது நாட்டிலுள்ள உத்தியோகபூர்வமான அலுவலகமாகும். சில வேளைகளில் உங்களது தகமைகள் ஜேர்மனியில் செல்லுபடியாகாது இருக்கலாம். இதை உங்கள் நாட்டில் நீங்கள் இருக்கும் போதே சரிபார்த்து அறிந்து கொள்ளலாம். ((Recognition of foreign qualifications ) மேலதிக தகவல்களை கீழ்வரும் இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.
Anerkennung in Deutschland
தொழில் வெற்றிடம்
நீங்கள் தொழில் செய்வதற்கான அனுமதிப்பத்திரம் உள்ளவரா? அப்படியானால் நீங்கள் உங்களுக்கான தொழிலைத் தேடலாம். இதற்கு அநேகமான சாத்தியக்கூறுகள் உள்ளன. இணையத்தில் வேலைக்கான விளம்பரங்கள், பத்திரிகைகள் அல்லது தொழில்முகவர்கள் மூலம் நீங்கள் தேடிக்கொள்ளலாம். பத்திரிகைகளில் அநேகமாக உள்ளுர் விளம்பரங்களைக் காணலாம். ஆனால் அவை எப்போதும் அண்மை வெளியீடாக இருக்கும். இணையத்தில் அநேகமாக தாராளமான விளம்பரங்களைக் காணலாம். ஆனால் அவை அண்மை வெளியீடாக இருக்கமாட்டாது. தொழில்முகவர்கள் / நிலையங்கள் உங்களுக்கான ஆலோசனையை வழங்கி, உங்களுக்கு ஏற்ற தொழிலை தேடித்தரக்கூடியவை. ஆனால் நீங்கள் நேரடியாக கம்பனிகளை அணுகமுடியும். ஒருவேளை அவர்களிடம் வேலை வெற்றிடங்கள் இருக்கக்கூடும். அவை இணையத்திலோ பத்திரிகையிலோ பிரசுரிக்கப்பட்டிருக்கமாட்டாது. ஆதனால் சில கம்பனிகளின் இணையத்தளத்தில் தொழில் வெற்றிடங்களை நீங்கள் காணலாம்.
தொழில்முகவர் நிலையங்களில் BIZ ( Careers advice centre) அதாவது தொழில் ஆலோசனைஇ தொழிலுக்கான விளம்பரங்களைக் காணலாம். அத்துடன் தொழில்களுக்கான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். அங்கே இணையத்தில் உங்களுடைய குறிப்புகளை பதிவேற்றம் செய்யலாம். அதேவேளை உங்களுக்கு எதுவும் தெரியவில்லை, அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதையும் தொழில் முகவர்கள் ஆலோசனையை வழங்குவர். கம்பனியில் தொழில் இடவமைவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழிலைப்பற்றி அறிந்து கொள்ளவும் தொடர்புகளை ஏற்படுத்தவும் இது உங்களுக்கு உதவும்.
விண்ணப்பித்தல்
தொழில் சந்தையில் உங்கள் விண்ணப்பமே முதற்படி. விண்ணப்ப ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை. நீங்கள் தயார்படுத்த வேண்டியவை, கம்பனிக்கான உங்கள் மேல்கடிதம், விண்ணப்பதாரியின் புகைப்படம், தகமைத்திரட்டு மற்றும் உங்களது சான்றிதழ்கள் (ஜேர்மன் மொழியில்), BIZ நிலையங்கள் ஜேர்மனியில் தொழிலுக்கு விண்ணப்பித்தலுக்கான சில செய்முறை பயிற்சிநெறிகளை நடாத்துகின்றன. இதன் மூலம் தொழிலுக்கான விண்ணப்பம் எப்படி இருக்க வேண்டும், நேர்முகப்பரீட்சைக்கு எப்படி முகங்கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அநேகமான நகரங்களில் குடிபெயர்வோருக்கான ஆலோசனை சேவைகள் நடைபெறுகின்றன. இங்கேயும் அவர்கள் உங்களுக்கு வேலை தேடவும், விண்ணப்பங்களை எழுதவும் உதவிசெய்வார்கள். (Bundesamt fur migration und fluchtlinge ஐப் பார்க்கவும்). விசேடமான ஆலோசனை 27 வயதிற்குட்பட்டவர்களுக்காக, இளைஞருக்கான குடிபெயர்வு சேவை மூலமாக வழங்கப்படுகிறது.
தலைப்புகளுக்கான இணைப்புகள்
- தகவல் வரைபடங்கள்
- Zentrale Auslands- und Fachvermittlung (ZAV) der Bundesagentur für Arbeit: Arbeiten in Deutschland
- BAMF: In Deutschland arbeiten
- Make it in Germany: Jobsuche
- Bundesagentur für Arbeit: Veranstaltungen suchen
- Recognition in Germany
- EURES-Deutschland: Förderung der beruflichen Mobilität in der EU
Video International Sign

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.
படிவத்தை தொடர்பு கொள்ள