Ein Mann schaut aus einem Fenster und lacht dabei. © Goethe-Institut

கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டுப்பயண அனுமதிச்சீட்டு       

ஜேர்மனிக்கு நீங்கள் செல்வதற்கு  செல்லுபடியான கடவுச்சீட்டு அல்லது உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏனைய ஆவணங்கள் அவசியமாகும். கடவுச்சீட்டு ஆனது பின்னர் நீங்கள் ஒரு அலுவலகத்திற்கு செல்லும் போது தேவைப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தைச்சாராத நாடுகளிலிருந்து வருவோருக்கு வெளிநாட்டுப்பயண அனுமதிச்சீட்டு அவசியம்.

வெளிநாட்டுப்பயண அனுமதிச்சீட்டை  நீங்கள் உங்கள்  நாட்டிலுள்ள ஜேர்மனிய தூதரகத்தினூடாகப்பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு ஏற்கனவே வேலைக்கான ஒப்பந்தம் அல்லது உங்கள் குடும்பத்தினர் யாராவது இங்குள்ளார்களா? அப்படியென்றால் இலகுவாக நீங்கள் வெளிநாட்டுப்பயண அனுமதிச்சீட்டைப்பெற்றுக்கொள்ளலாம். தகவல்களை வெளிநாட்டு அலுவல்கள் அலுவகத்தில் பெறமுடியும்.

ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய வர்த்தக வலயங்களில் குடியுரிமை பெற்றவர்களுக்கு வெளிநாட்டுப்பயண அனுமதிச்சீட்டு தேவையில்லை

Auf einer Hauswand sieht man ein Schild, das zum Bundesamt für Migration und Flüchtlinge führt. © Goethe-Institut

வசிப்போரை பதிவு செய்யும் அலுவலகம் மற்றும் வதிவிட அனுமதி

ஜேர்மனியில் நீங்கள் முதலில் உங்கள் நகரத்திலுள்ள வதிவிடத்தைப்பதிவு செய்யும் அலுவலகத்தில் (Einwohnermeldeamt) உங்களைப்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் நீங்கள் குடிவரவு திணைக்களத்திற்கு (Ausländeramt) செல்ல வேண்டும். அங்கு உங்களுக்கான வதிவிட அனுமதிப்பத்திரம் கிடைக்கும். இந்த அட்டையானது உங்களது வதிவிட விபரங்களைக் குறிக்கிறது. இதில் நீங்கள் ஜேர்மனியில் தங்கியிருக்கக் கூடிய காலம் மற்றும் நீங்கள் அங்கு தொழில் செய்ய முடியுமா? என்பதையும் குறிப்பிடுகின்றது.
நீங்கள் அலுவலகம் ஒன்றிற்கு செல்ல வேண்டுமா? ஆனால் ஜேர்மன் மொழியை உங்களால் சரியாகப்பேச முடியவில்லையா? இதற்கு நீங்கள் ஜேர்மன் மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை கேட்க முடியும். அதாவது ஜேர்மன் மொழியையும் உங்களுடைய மொழியையும் சரளமாக பேசக்கூடியவர் உங்கள் தொடர்பாடலுக்கு உதவலாம்.

ஒருங்கிணைப்பு பயிற்சிநெறி     

உங்களால் ஜேர்மன் மொழியை சரியாகப்பேச முடியவில்லையாயின் நீங்கள் ஒருங்கிணைப்பு பயிற்சிநெறியை கற்க அனுமதி உண்டு. இப்பயிற்சியில் ஜேர்மன் மொழியை நன்கு கற்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஜேர்மனியில் வாழ்க்கையைப்பற்றிய முக்கியமான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். குடிவரவு திணைக்களம்; இப்பயிற்சிநெறிக்கான தகவல்கள், அப்பபயிற்சிநெறி  நடைபெறும் இடம் போன்றவற்றை அறியத்தருகிறது. இதற்கான மேலதிகத் தகவல்களை ஒருங்கிணைப்பு பயிற்சிநெறிக்கான இணையப்பக்கத்தில் பார்வையிட முடியும்.

Ein Kursteilnehmer lacht in die Kamera. Er befindet sich im Klassenzimmer. © Goethe-Institut

தொழில் தேடுதல் மற்றும் கல்வி                 

அடுத்தபடியானது தொழில் தேடுதலாகும். நீங்கள் உங்கள் நாட்டில் ஏற்கெனவே ஓர் தொழிலுக்கான படிப்பை முடித்தவரா? அல்லது பல்கலைக்கழக படிப்பை முடித்தவரா? அப்படியாயின் அதற்கான பத்திரங்கள் அனைத்தும் மொழிப்பெயர்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இதை எங்கு செய்யலாம் என்பதை கேட்டு அறிந்து கொள்ளவும். வேலை வாய்ப்பு அலுவலகமும் உங்களுக்கு வேலையைத் தேடித்தர உதவும். உங்களுக்கு தொழில் அல்லது பள்ளிப்படிப்பு தகமைகள் இல்லாவிடின் நீங்களும்  வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கே செல்ல வேண்டும். அங்கு அவர்கள் தொழிலுக்கான ஆலோசனையை வழங்குவார்கள். நீங்கள் எந்த தொழிலை தெரிந்தெடுக்க வேண்டும் என்று சரியாக முடிவெடுக்க முடியாத பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில்சார் மற்றும் வகுப்புக்கள் பற்றிய தகவல்களையும் உங்களுக்கு வழங்குகிறது. மேலதிக தகவல்களை கல்வி மற்றும் தொழில்சார் கற்கைநெறிக்கான இணையப்பக்கத்தில் பார்வையிட முடியும்.

பிள்ளைகள் மற்றும் பள்ளிக்கூடம்          

பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். உங்கள் பிள்ளையை பள்ளியொன்றில் பதிவு செய்யுங்கள். உங்கள் நகரத்திலுள்ள இளவயதினருக்கான அலுவலகம் (Jugendamt) இதற்கு உதவி செய்யும். கல்வி மற்றும் தொழில்சார் கற்கைநெறிக்கான இணையப்பக்கத்தில்
 

காப்புறுதிகள்                

சில காப்புறுதிகள் மிகவும் முக்கியமானவை. விசேடமாக ஆயுள் காப்புறுதி, ஓய்வூதியக் காப்புறுதி மற்றும் பராமரிப்புக் காப்புறுதி. (காப்புறுதிப்பக்கத்தைப் பார்வையிடவும்).  நீங்கள் தொழில்புரிபவராக இருந்தால், இத்தகைய காப்புறுதிகள் உங்களுக்கு தன்னிச்சையாகக் கிடைக்கக்கூடியவை. (தொழில் முதற்பக்கத்தை பார்வையிடவும்). அத்துடன் உங்களுக்கு (Girokonto) நடைமுறைக்கணக்கு வங்கியில் இருக்க வேண்டும். (வங்கி கணக்கை பார்வையிடவும்).

Video International Sign

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.

படிவத்தை தொடர்பு கொள்ள