Die Flagge der Europäischen Union ist zu sehen. © Goethe-Institut

மேற்பார்வை

தற்போது ஐரோப்பிய ஒன்றியமானது 27 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஓர் கூட்டமைப்பு ஆகும். எல்லா  ஐரோப்பிய ஒன்றிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பானது அதன் நேச உடன்படிக்கையையும் ரோம் உடன்படிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது. இது 5 நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படுகிறது. ஐரோப்பிய மன்றம், ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு, ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய நீதிமன்றம்.

Der Checkpoint Charly in Berlin zeigt die Geschichte Deutschlands. © Goethe-Institut

வரலாறு

தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 1950ம் ஆண்டு முதல் 2ம் உலகப்போருக்கு பின் காணப்படும் 6 நாடுகளில் ஜேர்மனியும் ஓர் நாடு ஆகும். ஆரம்பத்தில் இது ஓர் வணிகக்கூட்டுறவாக காணப்பட்டது. 2002 ஆரம்பத்தில் யூரோ நாணயமானது ஐரோப்பாவில் 19 நாடுகளில் பொது நாணயமாக காணப்பட ஆரம்பித்தது. தற்போது பொதுவான கோட்பாடு காலநிலை மாற்றத்திலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திலிருந்து வெளிப்புற தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு, நீதி மற்றும் குடிபெயர்வு போன்றவற்றிற்கு முன்னிலை வகிக்கின்றது.

குறிக்கோள் மற்றும் விழுமியங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிக்கோளானது அந்நாட்டவர்களுக்கு நலத்தையும் சமாதானத்தையும் மேம்படுத்தலாகும். அதுமட்டுமல்லாது சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், பாதுகாப்பு, எந்தவித வரையறையற்ற சட்டம், உட்படுத்தல், சகிப்புத்தன்மை, சட்ட நிபந்தனை, ஒன்றிப்பு மற்றும் பாகுபாடு அற்று வாழ்தல் போன்ற விழுமியங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒன்று சேர்க்கின்றன. இதன் ஸ்தாபகத்திலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையில் யுத்தம் என்பது ஏற்பட்டது இல்லை.
 
சமத்துவம் என்பது இன்னுமொரு ஐரோப்பிய ஒன்றியத்தின் விழுமியம் ஆகும் இதன்; குறிக்கோளானது சகல பிரஜைகளுக்கும் சட்டத்தின் முன்னால் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையிலான சமத்துவமான ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிக்கோளின் ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் ஐரோப்பிய ஒன்றினைப்பின் அடிப்படையாகவும் காணப்படுகிறது. இது எல்லா பகுதிகளுக்கும் தொடர்பானது. இதில் முக்கியமானது சம வேலைக்கான சமமான ஊதியமானது 1957ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அது முழுமையாக செயற்படுத்தப்படவில்லை.

Auf einer Ampel zeigt das rote Licht ein gleichgeschlechtliches weibliches Paar und das grüne Licht ein gleichgeschlechtliches männlichs Paar. © Goethe-Institut

ஐரோப்பிய ஒன்றியத்தின் சம நடைமுறை அதிகாரம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் சம நடைமுறை அதிகாரத்தின்  நோக்கமானது ஐரோப்பிய ஒன்றிய தொழிலாளர்களுக்கு ஜேர்மனியில்  கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக ஆதரவளிப்பதாகும். அத்துடன் சுதந்திரம் , சட்டரீதியான  ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைக்கான தகவல்களை வழங்குகின்றது.
இத்தகைய தகவல்கள் ஜேர்மன், ஆங்கிலம், போல்னிஸ்,ஸ்பானிஸ்,பிரஞ்சு,ரோமனியன் மற்றும் பல்கேரியன் மொழிகளில் காணப்படுகிறது.

Video International Sign

உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.

படிவத்தை தொடர்பு கொள்ள