Auf einem Tisch stehen Stiftehalter mit vielen bunten Stiften und Bastelscheren. Daneben liegen selbstgemalte Bilder von Kindern. © Goethe-Institut

3 வயதிற்குட்பட்ட பிள்ளைகள்


நீங்களும் உங்கள் துணைவரும் தொழில்புரிபவர்கள் மட்டுமல்லாது உங்களுக்கு குழந்தையும் உள்ளதா? (ஒரு சில மாதங்களிலிருந்து 3 வயதிற்குட்பட்ட) அப்படியாயின் உங்கள் குழந்தையை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் (Kinderkrippe) வைத்திருக்கலாம். ஆனால் அதிகளவு இடங்களை கொண்டிருப்பதில்லை. இதனால் இடத்தை ஒதுக்கிக் கொள்ள உங்கள் குழந்தையை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் மழலையர் பள்ளிக்கு (Kindergarten)) செல்ல முடியும். அங்கு அவர்கள் விளையாட, பாட, வர்ணம் தீட்ட மற்றும் கைவேலைகளை செய்யலாம். அநேகமான மழலையர் பள்ளிகளில் கோடை காலங்களில் பராமரிப்போர் பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்வார்கள். இங்கு அநேகமாக மொழிக்கான ஒத்தழைப்பும் உண்டு. உதாரணமாக மொழி சம்பந்தமான விளையாட்டுக்கள் மற்றும் அவர்களுக்கு கதைகளையும் வாசிப்பார்கள்.

Auf einer Straße sind mit Straßenkreide eine Blume, ein Regebogen und eine Spinne gemalt. © Goethe-Institut

மழலையர் பள்ளி மற்றும் தினப்பராமரிப்பு நிலையங்கள்

மழலையர் பள்ளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையங்கள் பாடசாலைக்காக குழந்தைகளை தயார்படுத்துகின்றன. வயது 3 உடைய ஒவ்வொரு குழந்தையும் மழலையர் பள்ளிக்கு அனுமதிக்கப்படும். சிறிய சமூகங்களுக்கிடையிலும் மழலையர் பள்ளிகள் உண்டு. முன்கூட்டியே உங்களுடைய பிள்ளையை இதற்காக பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் அதற்கான இட ஒதுக்கீடு அதிகளவில் இங்கு கூட இல்லை. மழலையர் பள்ளி மூலம் உங்கள் பிள்ளை கலாச்சாரத்திற்கும் முகம் கொடுக்கின்றது. அத்துடன் புதிய நாட்டைப்பற்றி விரைவில் அறிந்து கொள்கின்றது.
 
சில மழலையர் பள்ளிகள் மதிய உணவு நேரம் வரைக்கும் திறந்திருக்கும். (காலை 7 மணியிலிருந்து மதியம் 12 அல்லது 1 மணி வரை). மற்றைய மழலையர் பள்ளிகள் நாள் முழுவதும் திறந்திருக்கும். (காலை 7 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணி வரை). இவை கீற்றா என அழைக்கப்படும் ((Kita / Kindertagesstätte )உங்கள் பிள்ளைக்கான மதிய உணவு வழங்கப்படும். பிள்ளையை பராமரிப்பதற்கு அல்லது பராமரிப்பு நிலையத்திற்கு நீங்கள் பணத்தை செலுத்த வேண்டும்.
 
இதற்கான கட்டணம் வேறுபடும். அதாவது மாநிலத்திலிருந்து ஏனைய மாநிலங்களுக்கு வேறுபடும். ஓவ்வொருவரும் ஒரே தொகையைக்கட்ட வேண்டுமென்ற அவசியம் இல்லை. இத்தொகையானது உங்கள் சம்பளம்,, பிள்ளையின் வயது,  உங்கள் பிள்ளை பள்ளியில் செலவழிக்கும் நேரம் என்பவற்றில் தங்கியுள்ளது. இங்கு அரசாங்க மற்றும் தனியார் மழலையர் பள்ளிகள் உண்டு. தனியார் மழலையர் பள்ளிகள் மிகவும் கட்டணம் கூடியவை. இவைகளில் அநேகமாக இரு மொழிகள் பேசப்படுகின்றன. உதாரணமாக ஸ்பானிய மொழி மற்றும் ஜேர்மன் மொழி.
 
குழந்தைகளுக்கான பள்ளி ஆரம்பிக்கும் முன் மொழிக்கான ஒரு பரீட்சை உண்டு. சில வேளைகளில் ஜேர்மன் மொழி ஜேர்மன் நாட்டவரின் குழந்தைக்கும் கூட கடினமாக இருக்கும். இப்பரீட்சையில் சித்தியடையாத குழந்தைகள் மீண்டும் ஒருவருடம் மழலையர் பள்ளிகளில் செலவிட அனுமதிக்கப்படுவார்கள் அல்லது அவர்களுக்கான மொழி உதவி வழங்கப்படும்.

Ein Schild, auf dem Kindergarten geschrieben steht, führt ein Pfeil mit einem gezeichneten Mädchen in Richtung des Kindergartens. © Goethe-Institut

Video International Sign

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.

படிவத்தை தொடர்பு கொள்ள