பொழுது போக்கு நேரம்

Menschen an einem Flussufer © Goethe-Institut

ஜேர்மனியில் பல்வேறு பொழுது போக்கு வாய்ப்புகள் உள்ளன. நகரங்களில் மேலும் வாய்ப்புகள் உள்ளன. அங்கு பல கலாச்சாரம் சம்பந்தப்பட்டவை உள்ளன., உதாரணமாக நாடகம், அருங்காட்சியகங்கள் மற்றும் கச்சேரிகள். மேலும், பல உணவகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. மற்றும், பொதுபோக்குவரத்து வசதிகள் உள்ளன. அதற்காக நகரத்தில் வாழ்வது மிகுந்த செலவாக இருக்கும். அது மிகவும் சத்தம் மிகுந்தது மற்றும் இயற்கை சம்பந்தப்பட்டவை மிகவும் குறைவு.

Audio-Player: Artikel anhören

Artikel anhören

Freizeit

நகரமும் கிராமமும்

கிராமத்தில் அல்லது சிறிய நகரங்களில் விடுமுறை வாய்ப்புகள் அதிகமாக இல்லை. ஆனால், அங்கு வாழ்க்கை அமைதியானது. இயற்கை அதிகமாகவும் இடம் அதிகமாகவும் உள்ளது. அது சத்தமில்லாதது மற்றும் மாசுபாடுகள் குறைவானது. பல வீடுகளுக்கு தோட்டங்களும் உள்ளன. வாழ்வாதார செலவுகள் குறைவாகும்.

பொழுதுபோக்கு அம்சங்களைப்பற்றி அறிய, உங்கள் நகரத்தின் இணையத்தளத்தைப்பாருங்கள்.

கலாச்சாரம்

நீங்கள் கலாச்சாரத்தை விரும்புகிறீர்களா? பெரும்பாலான நகரங்களில் அருங்காட்சியகங்கள், கண்காட்சிகள், திரைப்படங்கள், நாடகங்கள், கச்சேரிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் உள்ளன. பல திரையரங்குகள் உலகளாவிய படங்களை அதன் மூல மொழியில் (OV) காண்பிப்பவை, பெரும்பாலும் குறியீடுகளுடன். பெரும்பாலான நகரங்களும் இடங்களும் இணையதளத்தில் ஒரு நிகழ்ச்சி அட்டவணையை கொண்டுள்ளன. நீங்கள் இணையத்தில் என்ன உள்ளது என்று பார்க்கலாம்.

நகர நூலகங்கள் அல்லது நகரப் புத்தகசாலைகளில் நீங்கள் இலவசமாக அல்லது குறைந்த விலையில் புத்தகங்களைப் படிக்கலாம், இசை கேட்கலாம் மற்றும் திரைப்படங்களைப் பார்க்கலாம். நீங்கள் உங்கள் நகரில் உள்ள புத்தகசாலையில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக உங்கள் பதிவு சான்றிதழ் தேவைப்படுகிறது. நீங்கள் புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் இசைச்சிடிகளையும் கடனாக எடுக்கலாம்: அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று பின்னர் திரும்பி கொடுக்க வேண்டும்.

பூங்காக்கள் மற்றும் இயற்கை

நீங்கள் வெளியில் இருப்பதை விரும்புகிறீர்களா? இயற்கையில் நீங்கள் நல்ல முறையில் ஓய்வு பெற முடியும். ஒவ்வொரு நகரத்திலும் பூங்காக்கள் உள்ளன. அங்கு நீங்கள் நடந்து செல்ல, விளையாட அல்லது பிக்னிக் செய்யலாம். கோடை பருவத்தில் பூங்காவில் பொழுதைக்கழிக்க எப்போதும் நிறைய இருக்கிறது. மக்கள் அங்கு விளையாடுகிறார்கள். உதாரணமாக நீங்கள் ஜாகிங் செய்யலாம், கால்பந்து அல்லது டேபிள் டென்னிஸ் விளையாடலாம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம். பெரும்பாலான பூங்காக்கள் இலவசமாக இருக்கும்.

பிள்ளைகளுக்கான பல விளையாட்டு நிலைகளும் உள்ளன. தாவரவியல் பூங்கா தோட்டங்களில் நீங்கள் சிறப்பு செடிகளைப் பார்க்கலாம். உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்த விலங்குகளை மிருகப் பூங்காவில் பார்வையிட முடியும். தாவரவியல்பூங்கா தோட்டங்கள் மற்றும் மிருகப் பூங்காக்கள் பொதுவாக சிறியளவு பணம் அறவிடுகின்றன.. மேலும், பல பிராந்தியங்களில் ஏரிகள், காடுகள் அல்லது மலைகள் உள்ளன. நீங்கள் கடற்கரையில் அருகிலேயும் இருக்கலாம். நகரத்தில் நீங்கள் வாழ்ந்தால், இயற்கை சுற்றுலாபயணங்களை செய்ய முடியும். கோடை பருவத்தில், உதாரணமாக, நீங்கள் கடலுக்குச் சென்று அங்கே நீராடலாம்.

நண்பர்களை கண்டுபிடித்தல்

நண்பர்களுடன் இருப்பது மிகவும் நன்மையாக இருக்கும். விடுமுறையை ஒருங்கிணைந்து கழிப்பது அழகானது. ஜேர்மனியில் நீங்கள் மக்களை சந்தித்து, புதிய நண்பர்களையும் தோழிகளையும் கண்டுபிடிக்க முடியும். திறந்த மனதுடன் இருங்கள் மற்றும் ஆர்வம் காட்டுங்கள். உங்கள் விடுமுறையில் பல விஷயங்களைச் செய்யுங்கள். பொறுமையுடன் இருங்கள். சில நேரங்களில் இது சிறிது நேரம் எடுக்கும்.

முதலில், உங்கள் நாட்டில் இருந்து வருபவர்களின் சமூகத்திற்கு உதவி செய்யலாம். நீங்கள் சமூக வலைதளங்களில் இதை கண்டுபிடிக்கலாம். அங்கு பல குழுக்கள் உள்ளன, அவை ஒன்றும் பகிர்ந்துகொள்ளும் பொழுதுபோக்குகளுக்கும் ஆர்வங்களுக்கும் உதவுகின்றன. இடம் பெயர்ந்து வருபவர்களுக்கு பல அமைப்புகளும் உள்ளன. ஒரு ஆலோசனை அமைப்பில் கேளுங்கள். பெரும்பாலான நகரங்களில் பன்னாட்டு சந்திப்புகள் அல்லது நிகழ்ச்சிகள் உள்ளன. அங்கே நீங்கள் பல நாடுகளிலிருந்து வருபவர்களுடன் உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா? அப்போது நீங்கள் பெரும்பாலும் பிற பெற்றோரை சந்திக்கலாம். உதாரணமாக, குழந்தைகள் பராமரிப்பகம் அல்லது பள்ளியில். குழந்தைகள் பொதுவான ஒரு தலைப்பாக இருப்பார்கள். உங்கள் அயலவர்களை வாழ்த்துங்கள். சில நேரங்களில் உங்கள் பகுதியில் வாரந்த சந்தை, தெரு விழாக்கள் அல்லது அயலவர்களுக்கிடையான சந்திப்புகள் இருக்கும்.

உங்கள் வேலையில், நிச்சயமாக உங்களுக்கு நல்ல சக வேலையாட்கள் இருக்கக்கூடும்.மதிய இடை வேளையில் இல் எளிதாக பேசிக்கொள்ளலாம் அல்லது வேலைக்கு பிறகு சந்தித்துக்கொள்ளலாம்., உதாரணமாக, ஒரு நடைபயணத்தில் அல்லது ஒரு பானத்தை ஒன்றாக அருந்தலாம். இதனால் நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் நல்ல நண்பர்களை தேடிக்கொள்ள முடியும்.

ஒரு மொழிப்பயிற்சி நெறியில் நீங்கள் ஜேர்மனியில் புதியவராக உள்ள மற்றவர்களைச் சந்திக்க முடியும். அங்கு நீங்கள் புதிய நண்பர்கள் அல்லது தோழிகளைப் கானலாம். விளையாட்டிலும் நீங்கள் புதியவர்களை சந்திக்க முடியும். ஒரு விளையாட்டுக்குழுவில் சேர்ந்து விளையாடுவது பெரும்பாலும் இன்னும் அதிகம் சுவாரஸ்யமாக இருக்கும். பல நகரங்களில், கோடை பருவத்தில் பூங்காவில் கூட சேர்ந்து விளையாடுவதற்காக குழுக்கள் சந்திக்கின்றன. அல்லது நீங்கள் ஒரு சங்கத்தில் சேரலாம்.

சங்கங்கள், கிளப்புகள் மற்றும் வளர்ந்தோருக்கான கல்வி நிலையங்கள்.

ஜேர்மனியில் பல விளையாட்டு சங்கங்கள் உள்ளன. அங்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும், உதாரணமாக கால்பந்து விளையாட, நீச்சல் செய்ய, நடனம் ஆட அல்லது உடற்பயிற்சி செய்ய முடியும். நீங்கள் உங்கள் விளையாட்டை மற்றவர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்ய முடியும். ஆனால், மற்ற சங்கங்களும் கிளப்புகளும் உள்ளன. ஒரு சங்கத்தில் ஒரே விருப்பங்களும், இலக்குகளும் உள்ளவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். உதாரணமாக, இசை சங்கங்கள், இளைஞர் கிளப்புகள், சமையல் கிளப்புகள் அல்லது கணினி கிளப்புகள் உள்ளன. வளர்ந்தோருக்கான மற்றும் இளைஞர்களுக்கான சங்கங்கள் உள்ளன.

பல இடங்களில் வளர்ந்தோருக்கான கல்வி நிலையங்கள் உள்ளன. அங்கு, முதன்மையாக, பெரியவர்களுக்கான கற்றல் பாடங்கள் உள்ளன, உதாரணமாக மொழி பாடங்கள், நடனப் பாடங்கள், கணினி பாடங்கள். சில வளர்ந்தோருக்கான கல்வி நிலையங்களில் விளையாட்டு பாடங்களும் உள்ளன.

பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்காக பல இடங்களில் இலவச சலுகைகள் உள்ளன. சில இடங்களில் சிறிய பிள்ளைகளுக்கான விளையாட்டு குழுக்களும் உள்ளன.

உணவு கலாச்சாரம்

உலகில் எங்கும் போல, ஜேர்மனியர்களும் நல்ல உணவை விரும்புகிறார்கள். பல்வேறு விசேஷ உணவுகள் உள்ளன. அவை ஜேர்மனியில் மட்டும் காணப்படும் உணவுகள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும் உணவுகளாக இருக்கலாம். ஜேர்மனியில் பெரும்பாலானவர்கள் வெள்ளை நிற சொசேஜ் மற்றும் பிரெட்சென் எனும் உணவை அறிவர்.. இது பவேரியாவின் மிகவும் பிரசித்தமான உணவு. ஜேர்மனியின் வடக்கு பகுதியில் மக்கள் பல மீன் வகைகளை உண்ணுகிறார்கள். ஆனால், ஜேர்மனியின் உணவு மிகவும் சர்வதேசரீதியில் பிரபல்யமானது. பல்வேறு உணவகங்கள் உள்ளன. பெரிய நகரங்களில் மிகவும் பரபரப்பான தெரிவுகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் வியட்நாமிய, இந்திய, இத்தாலிய, துருக்கிய அல்லது ஈத்தியோப்பிய உணவுகளை சாப்பிடலாம்.

ஜேர்மனியர்கள், நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் காபி மற்றும் கேக் அருந்தும் வழக்கத்தை மிகவும் விரும்புகிறார்கள். கோடை பருவத்தில், மக்கள் பெரும்பாலும் வெளியில் உட்காருவார்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்களை பின்தொடருங்கள்