Leben mit Behinderung Foto (Ausschnitt): VGstockstudio/ Shutterstock.com

2009 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் ஊனமுற்றவர்களுக்கான உரிமைச்சட்டம் அமுலாக்கப்பட்டது. இச்சட்டம் ஊனமுற்றவர்களும் ஏனையோரைப்போன்று  சமமாக சமூகத்தில் வாழ உரிமை உள்ளது எனத்தெரிவிக்கிறது.

ஜேர்மனியில் உதாரணமாக சக்கர நாற்காலியை உபயோகிப்போர் பொது இடங்களுக்குச் ;செல்லவும் பொதுக்கட்டிடங்களில் உள்நுழையவும் பஸ், டிராம்களில் கடினமின்றி  ஏறி இறங்கவும் வளைவுப்பாதைகளில் செல்லவும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்பார்வையற்றோர் தமது சமிக்ஞைகளை அறிந்து கொள்ள முடியும். இது மூன்று கறுப்புப்புள்ளிகள் மஞ்சள் பின்னணியில்  அமைந்தது. அநேகமாக அவர்கள் மணிக்கட்டில் தெரியத்தக்க அளவில்  ஓர் பட்டியை அணிந்திருப்பார்கள். மற்றும் கையில் வெள்ளைப்பிரம்பு அல்லது அருகில் நாயை வைத்திருப்பார்கள்.

அநேகமான தெரு விளக்கு சமிக்ஞைகள்குறிப்பிட்ட ஓர் ஒலியை எழுப்புகின்றன. இதன் மூலம் பார்வையற்றோர் தாம் எப்போது பாதையைக்கடக்க வேண்டும் என அறிவர். அநேகமான பொது இடங்களிலும் பார்வையற்றோருக்கான  எழுத்துக்கள் அதாவது பிரேய்லர் எழுத்துக்கள் உள்ளன.

இவ்வுரிமைகள் உறுதிப்படுத்தபடாவிடின் ,சில வேளைகளில் இவற்றில் பாகுபாடு / புறக்கணிப்புக்கானப்படலாம். எமது இணையத்தளத்திலுள்ள தலைப்புக்களைப்பார்வையிடவும்.

Man sieht eine Hebevorrichtung mit einem blau-weißen Aufkleber, der ein Symbol mit einem Rollstuhlfahrer zeigt. © Goethe-Institut

Video International Sign