Ein Wohnhaus mit vielen Wohnungen ist zu sehen. Vor dem Haus steht ein blühender Baum. © Goethe-Institut


வீடு தேடுதல்

நீங்கள் உங்களுக்கான வீடு / தொடர்மாடி வீடு ஒன்றை தேடுகிறீர்களா? பத்திரிகைகளில் அநேகமான வீட்டு விளம்பரங்கள் பெரும்பாலும் வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் பத்திரிகைகளுக்கான இணையத்தளங்களில் காண முடியும். இணையத்தளங்களில் சில வீட்டு முகவர்களின் விபரங்களும் உள்ளன. அத்துடன் நீங்கள் வசிக்கும் நகரத்திற்கான வீட்டு அலுவலகத்தின் உதவியையும் இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் நகரசயை அலுவலகங்களும் உங்களுக்கு உதவ முடியும். சில இடங்களில்  இலகுவாக வீடு ஒன்றை தேட முடியும். சில இடங்களில் இது மிகவும் கடினமாக அமையும். அப்படியான சந்தர்ப்பங்களில் வீட்டு முகவர்களின் உதவியை நாடலாம். இதற்கு சாதாரணமாக 2-3 மாத வாடகைப்பணத்தை அவர்களுக்கு கட்டணமாக வழங்க வேண்டி ஏற்படும்.

Ein Schlüsselbrett mit vielen Schlüsseln hängt im Eingang einer Wohnung. © Goethe-Institut

வாடகை மற்றும் முற்பணம்

விளம்பரங்களில் நீங்கள் எவ்வளவு வாடகையைச் செலுத்த வேண்டுமென்பதை அநேகமாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அது பெரும்பாலும் ஏனைய கட்டணங்கள் இன்றியே குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் கட்டாயமாக இதற்காக மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டும். உதாரணமாக தண்ணீருக்கான கட்டணம், மாடிப்படிகளை துப்பரவு செய்தல் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கான கட்டணம், மின் சூடாக்கி மற்றும் மின்சாரம் போன்றவையும் மேலதிகக் கட்டணங்களின் ஒருபகுதியாக அமையும். ஆனால் இது வேறுபடலாம். நீங்கள் வீட்டை வாடகைக்கு வழங்குபவரை இதைப்பற்றி அதாவது மேலதிகக் கட்டணங்கள் எவை? மேலதிகமாக எவ்வளவு நீங்கள் செலுத்த வேண்டும் என்பதை கேட்டறிந்து கொள்ள வேண்டும்.

(குளிர் வாடகை) தனி வாடகை மற்றும் மேலதிக கொடுப்பனவு சேர்ந்த வாடகை சூடான வாடகை என அழைக்கப்படும். இந்த மொத்த வாடகைப்பணம் (சூடான வாடகை) வாடகை வழங்குநருக்கு ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும்.

சாதாரண வீடுகளில் தளபாடங்கள் இருக்காது. சமயலறையில் மட்டும் அநேகமாக அடுப்பு இருக்கும். இது வீட்டுடன் அமைக்கப்பட்டதாகும். உதாரணமாக குளிரூட்டிஇ இதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். இது ஈடு செய்யும் கட்டணமாகும்.

அநேகமாக வாடகைக்கு வழங்குவோர் 3 மாத குளிர்;; வாடகை அதாவது மேலதிக கட்டணங்கள் இன்றிய மொத்த வாடகைப்பணத்தை முற்பணமாக பெறுவர். நீங்கள் வீடு மாறும் போது இம்முற்பணம் மீளதரப்படும். நீங்கள் உங்கள் வாடகைப்பணம் உயர்வானது எனக்கருதகிறீர்களா? இதைப்பார்வையிட வாடகை அட்டவணை '“Mietspiegel” ' ஐப்பார்வையிட முடியும். இங்கே சகல நகரங்களுக்குமான சராசரி வாடகையை அறிந்து கொள்ளலாம். இணையத்தில் “Mietspiegel”  '  ஐ தேடி அதில் உங்களது நகரத்தின் பெயரை இடுங்கள்.
 
வருட ஆரம்பத்தில் உங்களுக்கு எவ்வளவு நீர், மின்சாரம் அல்லது எரிவாயு தேவைப்படும் என்பது தெரியாது. ஆகவே ஒவ்வொரு மாதத்திற்கும் முற்பணத்தை செலுத்துங்கள். இதன் மூலம் வருட இறுதியில் உங்களுக்கு மிகுதிப்பணம் மீள வழங்கப்படும் அல்லது மேலதிகக் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.

Ein Stromzähler hängt im Keller einer Wohnung. © Goethe-Institut

குடியிருப்பு ஒப்பந்தம்

சகல தகவல்களும் வாடகை மற்றும் முற்பண வைப்பு என்பன இதில் அடங்கும். இதில் நீங்கள் வேறு வீடு குடிமாறும் போது ஏற்கெனவே குடியிருந்த வீட்டை மீண்டும் வடிவமைத்துக் கொள்ள வேண்டுமா என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் உங்களது இறுதித் துண்டுப்பிரசுரத்தைப் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். குடிபுகுமுன் இப்பத்திரத்தில் கையெழுத்திட்டு அதை ஒப்படைக்க வேண்டும். உதாரணமாக இதில் வீட்டில் ஏதாவது சேதமேற்பட்டிருந்தால் இதன்மூலம் நீங்களும், உங்கள் வீட்டு உரிமையாளரும்  இச்சேதத்தை நீங்கள் ஏற்படுத்தவில்லை  என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இத்துண்டுப்பிரசுரம் மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன் கவனமாக படித்து அதன்பின் கையெழுத்திடவும்.

வீட்டு விதிமுறைகள்                

உங்கள் அயலவருடன் மனஸ்தாபத்தை ஏற்படுத்த விருப்பமில்லையா? சில விதிமுறைகளைக் கவனியுங்கள். சாதாரணமாக இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 7 மணிவரை அமைதியான நேரம். இந் நேரத்தில் நீங்கள் அதிகளவு சத்தத்தை ஏற்படுத்தக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மிகவும் அமைதியைக்காக்க வேண்டும்.
 
ஜேர்மனியில் தனித்தனியாக கழிவுகளை அகற்றுவதற்கு கொள்கலன்கள் உள்ளன. கடதாசி மற்றும் காட்போட், பழ, மரக்கறிவகை கழிவுகள் போன்றவை. கண்ணாடி மற்றும் தகர டப்பாக்களை அகற்றவதற்கு நீங்கள் அதற்கென பிரத்தியேகமாக உள்ள கொள்கலன்களில் அல்லது இடங்களில் அகற்ற வேண்டும். மற்றைய சகல விதிமுறைகளையும் உங்களது வீட்டு விதிமுறைகளில் கவனிக்க முடியும். உதாரணமாக உங்கள் வீட்டில் நாய் பூனையை வளர்க்க முடியுமா? அல்லது படிகட்டு அல்லது முன்சாலையை துப்பரவு செய்ய வேண்டுமா?

Eine Person putzt ein Treppenhaus in einem Wohnhaus. © Goethe-Institut  

Video International Sign

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.

படிவத்தை தொடர்பு கொள்ள