Ansicht von vorne auf einen orangenen Rettungswagen mit der Aufschrift © Goethe-Institut

மிகவும் முக்கியமான அவசர தொலைபேசி எண்கள்

சகல அவசர  தொலைபேசி எண்களுக்கும் இலவசமாக எந்தவொரு தொலைபேசியிலிருந்தும் அழைக்கலாம்.
 
காவற்துறை 110 
காவற்துறையினர் அவசர மருத்துவம் அற்ற , வன்முறை மற்றும் கடுமையான போக்குவரத்து விபத்துகளுக்கு, தயவு செய்து உங்களது பெயரை எழுதி ,
 
விபத்து எங்கே நடந்தது?
என்ன நடந்தது?
பாதிக்கப்பட்டோர் யார்?
ஏற்பட்ட காயங்கள் யாவை?
மேலதிக வினாக்களுக்கு காத்திருக்கவும்.


Nahaufnahme auf ein Polizeiauto von der Seite mit dem Schriftzug "Polizei" © Goethe-Institut
தீயணைப்புப்படை / அவசர/ மீட்புப்பணி சேவை 112
112 ஆனது உயிருக்கு ஆபத்தான சந்தர்ப்பங்களில் அதாவது மார்பு வலி , பாரிச வாதம் அல்லது கடுமையான விபத்துகளின் போது அழைக்கப்படலாம். விபத்தின் கடுமை ஆனது உங்களுக்கு தெரியாவிடின் தாமதிக்காமல் மீட்புப்பணியினருக்கு அழைப்பு விடுக்கவும். இது அவசரமான நிலைமையில் உயிரைக்காப்பாற்ற உதவும்.
 

Ansicht auf das geschlossene Tor eines Feuerwehrgebäudes, durch die Fenster ist ein Feuerwehrauto sichtbar. © Goethe-Institut மருத்துவ அவரச சேவை 116117
வார இறுதி நாட்களில் அவசர மருத்துவ சேவை ஏற்படின் நீங்கள் அவசர சிகிச்சைப்பிரிவை அழைக்கலாம்  அல்லது அருகிலுள்ள அவசர மருத்துவ சிகிச்சைக்குப்போக முடியும். இத்தகைய மருத்துவ சிகிச்சை நிலையங்கள் அநேகமாக வைத்தியசாலைகளுடன் சம்பந்தப்பட்டவை. அத்துடன் இரவு 10 மணிவரக்கும் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும்.
அல்லாவிடின் 116117 ஐ அழையுங்கள். இந்த அழைப்பானது நாடெங்கும் பாவனையிலுள்ள  இலவச அழைப்பாகும்.
இதன் மூலம் அருகாமையிலுள்ள வைத்தியரிடம் செல்ல அறிவுறுத்தப்படுவீர்கள். அவசியமெனின் வீட்டுக்கு வைத்தியர் வருகைதர  தலைமையகத்திலிருந்து அனுமதி வழங்கப்படும்.

பல் அவசர சேவை 01805 / 986700
இச்சேவையானது நீங்கள் நேராக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள சிகிச்சை நிலையங்களின் தொலைபேசி எண்கள் வழங்கப்படும்.

குழந்தைகள்
குழந்தைகளுக்கு மேற்குறிப்பிடப்பட்டவை மற்றும் எண்கள் பொதுவாக வளர்ந்தோரைப்போல உபயோகிக்க முடியும். குழந்தைகள் சம்பத்தப்படும் போது அவ்வேளைகளில் விரைவாகவும் சரியாகவும் , நிபந்தனைகளின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமாகும்.
முதலில் உதாரணமாக ஒரு குழந்தை விழுந்தால் அவன் ஃஅவளை சமாதானப்படுத்தி அரவணைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தையை அமைதிப்படுத்தி அதை உடனடியாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.அதிகளவில் கவலைப்படாமல் உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
முழுமையான முதலுதவிப்பெட்டி எப்பொழுதும் சிறுகாயங்களைக்கட்ட  துணிப்பட்டி மற்றும் தொற்று நீக்கும்காய மருந்துகளுடன் இருக்க வேண்டும்.

குழந்தை மற்றும் இளைஞர் அவசர அழைப்பு 0800 / 1110333
இந்த எண்ணிற்கு குழந்தைகள் மர்றும் இளைஞர் சம்பந்தப்பட்டவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம். இணையம் சம்பந்தப்பட்ட ,குழந்தைகளுக்கான பாலியல் சம்பந்தப்பட்ட  சகல பிரச்சனைகளுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
 
பெற்றோருக்கான அவசர அழைப்பு.  0800 / 1110550
இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு கல்வி சம்பந்தமான  இணையம் சம்பந்தமான, பாலியல் வன்முறை மற்றும் பிள்ளைகளுடன் பெற்றோர் எதிர் கொள்ளும் சகல பிரச்சனைகளுக்காகவும் பேச முடியும்.

பெண்களுக்கெதிரான வன்முறை உதவிக்கான அவசர அழைப்பு  08000 / 116016
தேசிய அளவிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசனை சேவை.சமூகளவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இலவசமாக ஆலோசனைகளை வழங்க முடியும். தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படும்.வருடத்தில் சகல நாட்களும் அதாவது 365 நாட்களும் சேவை உள்ளது.
 
கற்பிணிப்பெண்களுக்கான உதவிச்சேவை  0800 / 4040020
(அநாமதேயம் மற்றும் பாதுகாப்பு)


நெருக்கடியான நேரங்களில் தொலைபேசி எண் 0800 /1110111
பிரச்சனைகள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் அதாவது துணைவர்,பாடசாலை மற்றும் வேலைத்தளங்களில் அடாவடித்தனங்கள், வேலை இல்லாப்பிரச்சனை,அடிமைப்படல், நோய்கள், தனிமை, நெருக்கடியான நிலைமை, மதப்பிரச்சனைகள் போன்றவற்றைப்பற்றிக் ;கலந்தாலோசிக்கலாம்.

உடனடியாகத்தடைப்படுத்தல்  116116
உங்கள் வங்கி இலத்திரனியல் அட்டை , கடனட்டை மற்றும் அடையாள அட்டை களவாடப்பட்டிருந்தால் அல்லது தொலைந்திருந்தால்  மேற்கண்ட தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தடைப்படுத்தலாம்.