Auf einem Bild, das von einem Kind gemalt wurde, sind Wörter in verschiedenen Sprachen zu sehen. © Goethe-Institut

ஒவ்வொரு வருடமும், பல்வேறுபட்ட நாடுகளிலிருலுந்து அநேகமானோர் ஜேர்மனியில் குடியேறுகிறார்கள். 20மூற்கு அதிகமானோர் வேறு கலாச்சாரத்திலிருந்து வந்தவர்கள். அநேகமானோர் பன்மொழி பேசுவோர். அவர்கள் தமது தாய்மொழியை மட்டுமல்லாமல் வேறு ஏனைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைப் பேசுவோர். ஜேர்மனியில் குடியேறும் அநேகமானோர் ஜேர்மன் மொழியை  தமது வேற்று மொழி அல்லது இரண்டாம் மொழியாகக் கற்கின்றனர்.
தாம் வசிக்கம் இடத்தில் உள்ள மக்களுடன் மொழியை பேசுவது மிகவும் இலகுவாக அமைகிறது. (இது Umgebungssprache என அழைக்கப்படுகிறது). அத்துடன் அவர்களின் வாழ்க்கை முறையையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

பன்மொழியின் நன்மைகள்

இன்றைய உலகில் பல மொழிகளைப் பேசும் ஆற்றலானது மிக முக்கியமானதொன்றாகும். நாடுகளுக்கிடையிலுள்ள எல்லைகள் முன்னரை விட இப்போது திறக்கப்பட்டுள்ளன. பெரும்தொகையான மக்கள் வேறு நாடுகளுக்கு குடி பெயர்கின்றனர். தனது தாய்மொழியைப் போல் வேற்று மொழியைப் பேசுபவருக்கு வேலையிலும், தனிப்பட்ட ரீதியிலும் அநேகமான சந்தர்ப்பங்கள் உள்ளன. இவர்கள் பல்வேறுபட்ட கலாச்சாரத்திலிருந்து வந்தோருக்கிடையில் தொடர்பாடலை ஏற்படுத்த இலகுவாக அமைகிறது. பன்முகப்படுத்தப்பட்ட நோக்கோடு மற்றைய ஏனைய மக்களின் வாழ்க்கை முறையை அறியக் கூடியதாக உள்ளது. அநேகமான குழந்தைகள் இயற்கையாகவே தமது பெற்றோரின் ஜேர்மனியில் வளரும் புலம்பெயர்ந்த குடும்பங்களிலிருந்த மொழியைப் பேசுகின்றனர்.(பிறப்பிலிருந்து தமது தாய் மொழியை) அம் மொழியுடன் தமது பெற்றோரின் மூலம் தாய் நாட்டின் கலாச்சாரங்களையும் கற்றுக்கொள்கின்றனர். அடிக்கடி அவர்கள் ஜேர்மன்மொழியை விளையாட்டு மற்றைய குழந்தைகளுடனான வளர்ந்தோருடனூடாக தொடர்புகளின் மூலமும் கற்கின்றனர். உதாரணமாக பாலர் வகுப்பு மற்றும் பாடசாலை. இக் குழந்தைகள் பன்மொழியுடன் ( இருவேறுபட்ட மொழி) வளர்கின்றனர்.

ஜேர்மன் மொழியின் முக்கியத்துவம்

ஜேர்மனியில் வசிக்கும் வளர்ந்தோருக்கு ஜேர்மன்மொழி அவசியம். இதன் மூலம் தம்மைச்சுற்றி உள்ளவர்களுடன் பேசுவதற்கு உதவியாக இருக்கும். உள்ளுர் மொழியைப் பேசுவது ஒருங்கிணைப்பிற்கு உதவியாக இருக்கும். பிள்ளைகளுக்கு ஜேர்மன்மொழி அவர்கள் ஜேர்மனிய பாடசாலைக்கு செல்வதற்கு மிக அவசியம்.

zwei Puppen mit unterschiedlicher Hautfarbe sitzen sich in einem Puppenbett gegenüber. © Goethe-Institut

உள்ளிடுதல் மற்றும் வெளியிடுதல்

ஒரு மொழியைக் கற்கும் போது உள்ளிடுதல் மற்றும் வெளியிடுதல் மிகவும் அவசியம். உள்ளிடுதல் என்பது ஒருவர் கேட்கும் மற்றும் வாசிக்கும் மொழியாகும். அன்றாடம் மொழியானது தொடர்பில் இருக்க வேண்டும். முக்கியமாக நிஜவாழ்க்கை சந்தர்ப்பங்களில் உள்ளீடு ஆனது மிக உயர்தரமாக, இன்னொரு வகையில் சொல்வதென்றால் தாய்மொழியை சரளமாக பேசுபவர் மூலமாக வர வேண்டும். குழந்தைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை சத்தமாக வாசிப்பது மிகச்சிறந்த  உள்ளீட்டு முறையாகும்.
வெளியிடுதலும் மிக முக்கியமானதொன்றாகும். வெளியிடுதல் என்பது  ஒருவர் மொழியை உருவாக்குதல். உதாரணமாக பேசுதல் அல்லது எழுதுதல். மக்கள் மொழியை உபயோகிக்கும் ஆற்றல் மிக முக்கியமானதாகும். மொழியை சரளமாக பேசுவதற்கு அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பழகிக் கொள்ள முடியும். பேசுதல் மற்றும் எழுதுதல் ஒரு மொழியைப் பயின்று கொள்ள மிக பயன் அளிக்கக் கூடிய முறையாகும்.

உங்கள் குழந்தை அல்லது குழைந்தைகளுடன் வீட்டில் ஜேர்மன் மொழியை தவிர தாய்மொழியை பேசுவீர்களேயானால், அவர்களின் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள அநேகமானபயிற்சித் திறன்கள் உள்ளன.

குடும்ப மொழியின் முக்கியத்துவம்

அநேகமான குடும்பங்களில் தாய், மற்றும் தந்தை ஒரே மொழியைப் பேசுகின்றனர். பெரும்பான்மையான குடிபெயர்ந்த குடும்பங்களில் இது ஜேர்மன் மொழி அல்ல. ஆதலால் குழந்தைகள் இக்குடும்ப மொழியைக் கற்கின்றனர். இது வீட்டில் பேசுவது நல்லது. இம்முறையில் குழந்தைகள் தமது பிறப்பிடத்தின் உணர்வுரீதியான மொழி, கலாச்சார இணைப்பை ஏற்படுத்தி கொள்கின்றனர்.

பிறப்பிடத்தின் மொழி ( முதல்மொழி அல்லது குடும்பமொழி) யை பேசும் பிள்ளைகள் மற்றும் வளர்ந்தோர் மூலமாக எப்பொழுதும் கலாச்சாரத் தகவல்கள், பாரம்பரியம் போன்றவற்றின் பெருமை பேசப்படுகின்றன. குடும்பங்கள் தமது மொழியை விட்டுக் கொடுக்கக் கூடாது. இதற்கு மாறாக வீட்டில் தொடர்ச்சியாக தமது மொழியை பிள்ளைகளுடனும் குடும்பத்தாருடனும் பேச வேண்டும். பிள்ளைகள் முக்கியமாக தமது முதல் மொழியை பேசுவது அவசியமாகும். தமது தாய் மொழியில் நல்ல திறனானது மற்றைய மொழிகளில் தேர்ச்சிபெற மிகச்சிறந்த ஆரம்பமாகும். பெரிய நகரங்களில் இரு மொழிகளடங்கிய மற்றும் மூன்று மொழிகளடங்கிய பிள்ளைகளுக்கான பாலர் பாடசாலைகள் உண்டு.

Vor einer Weltkarte hängt ein Wandkalender auf Burmesisch mit deutschen Notizen. © Goethe-Institut

ஒரு நபர், ஒரு மொழி

சில குடும்பங்களில் தாய் மற்றும் தந்தை ஒரே மொழியைப் பேசுவதில்லை. அநேகமான பெற்றோர் ஒரு நபர், ஒரு மொழி பயன்பாட்டையே அணுகுகிறார்கள். அதாவது ஒவ்வொருவரும் தமது மொழியை பிள்ளையுடன் பேசுகிறார்கள். குடும்ப மொழி இன்னொரு வகையில் சொல்லப்போனால், இரு பெற்றோரும், பிள்ளையும் ஒன்றாக இருக்கும் போது பேசும் மொழி. இது சில வேளைகளில் இரு பெற்றோர்களில் ஒருவரின் மொழியாகும். (தந்தையின் அல்லது தாயின்). ஆனால் சில வேளைகளில் மூன்றாவது மொழி, இரு பெற்றோரும் சரளமாக பேசும் மொழியாகவும் இருக்கலாம்.

பன் மொழியில் பிள்ளைகளை வளர்த்தலின் முக்கியத்துவம்

பிள்ளைகளை பன் மொழியில் வளர்க்கும் போது பெற்றோர் உணர்வு ரீதியான பிணைப்பை தமது மொழியுடன் ஏற்படுத்துதல் அவசியம். நல்லதொரு தேர்வு என்னவெனில் தாய் அல்லது தந்தை தமது தாய் மொழியில் பிள்ளையுடன் பேசுவதாகும். (முதல் மொழி). குடும்ப மொழி ஒன்று இருப்பின், இது எப்போதும் வீட்டில் பேசப்பட வேண்டும். பிள்ளைக்கு அம்மொழியைப் பேசப் பிரியம் இல்லை எனின், பிள்ளையைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அநேகமாக அவர்களுக்கு இப்படி கடந்து போகும் ஒரு கட்டமாகும். பெற்றோர் தமது மொழிகளை பேசும் போது ஒன்றுடன் ஒன்று கலந்து விடக் கூடாது. பெற்றோர் தமது தாய் மொழியில் பற்றுக் கொண்டிருக்கும் போது, இம்மனநிலையானது பிள்ளைகளையும் அம்மொழியைக் கற்றுக் கொள்ளத் தூண்டுகிறது.

பிள்ளைகளின் முதலாவது மொழித்திறனை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும். இதே போல் உள்ளுர் மொழியைக் கற்றுக் கொள்வதும் அவசியமாகும்.

அநேகமான ஆலோசனை மையங்கள் பன்மொழிக்கல்விய தொடரதமது ஆதரவையும் உதவியையும் வழங்குகின்றன. அநேகமான நகரங்கள், நகரசபைகளில் அலுவலகங்கள் அல்லது திணைக்களங்களை கலை கலாச்சார அலுவல்களுக்குப் பொறுப்பாக கொண்டுள்ளன. இங்கு தொழில்புரியும் உத்தியோகத்தர்கள் மொழி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் பற்றிய விடயங்களை அறியத்தருவார்கள். மற்றும் ஆலோசனையையும் தருவார்கள். தனியார் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் ஆலோசனை மையங்களைக் கொண்டுள்ளன. அநேகமான முகவர்களும் பன்மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு சம்பந்தமாக தொழில் புரிகின்றன. இணையத்தில் 'உள்ளுர் கலாச்சார ஆலோசனை மையம்' (interkulturelle Beratungsstelle OR mehrsprachige Beratungsstelle) என்ற தேடலின் போது பயன்தரக்கூடிய இணைப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பிள்ளைகளின் ஜேர்மன் மொழித்திறனை வளர்த்தல்

ஒவ்வொரு ஜேர்மன் மாநிலமும் தமக்கென கோட்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் செயல்திட்டத்தைக் கொண்டுள்ளன. இவை பாலர் மற்றும் ஆரம்ப வகுப்பு பிள்ளைகளின் ஜேர்மன் மொழித்திறனை வளர்த்துக் கொள்ள ஆகும். போதியளவு ஜேர்மன் மொழித்தகமையைக் கொண்டிராத பிள்ளைகள், மொழி அபிவிருத்தி நிகழ்வுகளின் மூலம் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். அதாவது முற்பயிற்சி வகுப்புக்கள் மற்றும் ஒத்துழைப்பு வகுப்புக்கள்  மூலம் ஜேர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளலாம், மற்றும் இங்கு அநேகமான ஆலோசனை மையங்கள் ஜேர்மன் மொழியைக் கற்றுக் கொள்ள பிள்ளைகளுக்கு உதவுகின்றன.

தாய் மொழியை விருத்தி செய்தல்

பிள்ளைகளின் முதல் மொழியை விருத்தி செய்ய வீட்டில் மற்றும் கற்றல் வழிமுறைகள் மூலம் அவர்களின் குடும்ப மொழியின் தகமையை வளர்த்துக் கொள்ளலாம்.
பெற்றோர் அடிக்கடி சத்தமாக பிள்ளைகளுக்கு வாசிக்க வேண்டும், மற்றும் பாடல்கள் பாடி, விளையாட்டுகளை விளையாட வேண்டும். பிள்ளைகள் தொலைபேசி மற்றும் ஸ்கைப் மூலம் குடும்ப அங்கத்தவர்களுடன் பேசலாம். இவ்வாறு ஒரே மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட ஏனைய குடும்பங்களைத் தெரியுமாயின் அவர்களுடன் விளையாடி மற்றும் தாய்மொழியைப் பேசவும் முடியும்.

அநேகமான தூதரக அலுவலகங்கள், மற்றும் நிறுவனங்கள் குடும்ப  மொழிகளுக்கான  அபிவிருத்தி நிகழ்வுகளை பாடசாலை பிள்ளைகளுக்காக வழங்குகின்றன. இத்தகைய நிகழ்வுகள் அல்லது வகுப்புக்களில் பிள்ளைகள் தமது மொழியை வாசிக்கவும் எழுதவும் மற்றும் தமது சொந்த நாட்டின் கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்கின்றனர். ஒரு சில ஜேர்மனிய மாநிலங்களில் உள்ள பிரதான பாடசாலைகளில் தாய் மொழியை விருத்தி செய்யும் நிகழ்வுகளும் உள்ளன. இது துணை தாய் மொழி விவரணம் என அழைக்கப்படுகிறது.

இணையத்தில் இத்தகைய நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் குறிப்பிட்ட மொழி மற்றும் கலாச்சார சமூகங்களை பிரதிநிதிப்படுத்தி விளையாட்டு குழுக்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் என்பனவற்றை நடத்துகின்றன. உதாரணமாக அவர்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு குடும்பமொழியை உபயோகிக்கவும் அல்லது தாய் மொழியை அன்றாட சந்தர்ப்பங்களில் உபயோகிக்கவும் வழிவகுக்குகிறார்கள்.
 

Video International Sign

உங்களிடம் மேலும் கேள்விகள் ஏதேனும் உள்ளதா? தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கேள்வியை நாங்கள் அநாமதேயமாக இளைஞர் இடம்பெயர்வு சேவைகளின் ஆலோசகர்களுக்கு அனுப்புவோம்.

படிவத்தை தொடர்பு கொள்ள