உள்ளடக்கம்: குறைபாடுகளுடன் வாழுதல்
ஜேர்மனியில் சுமார் எட்டு மில்லியன் பேர் கடுமையான குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். பல வகையான குறைபாடுகள் உள்ளன. உடல் ரீதியான குறைபாடு உள்ள மக்கள், உதாரணமாக கண் தெரியாதவர்கள் அல்லது சக்கர நாற்காலியில் செல்லும் மக்களும் இருக்கின்றனர். இவ்வாறான குறைபாடுகள் பெரும்பாலும் காணப்படுகின்றன. சில குறைபாடுகள் காணப்படுவதில்லை. உதாரணமாக கற்றல் சிரமங்கள், ந்--அட்பட்ட நோய்கள் உதாரணமாக புற்று நோய் அல்லது மனநிலை குறைபாடுகள். சில மக்கள் பிறந்தது முதல் குறைபாடுகளை அனுபவிக்கின்றனர். சில நேரங்களில் குறைபாடு விபத்து மூலமோ அல்லது நோய் மூலமோ வரலாம்.