ஒருங்கிணைப்பு பயிற்சிநெறி

Ein Tisch mit Begriffen auf Karten zum Zuordnen © Goethe-Institut/ Gina Bolle

நீங்கள் ஜேமனிக்கு புதியவரா மற்றும் மொழியைக் கற்க விரும்புகிறீர்களா? அப்படியாயின் நீங்கள் ஒருங்கிணைப்பு பாடநெறியில் சேரலாம். உங்களுக்கு ஜேர்மன் மொழிதெரியாது அல்லது மிகக் குறைவாகவே அறிந்திருந்தால், நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கலாம். அதாவது, நீங்கள் ஒருங்கிணைப்பு பாடநெறியை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டவர் ஆணையம் உங்களுக்கு இந்த தகவலை வழங்கும்.

பங்கு பற்றுதல்

வெளிநாட்டவர் ஆணையம் உங்களுக்கு பங்கேற்பு உரிமையும், மொழிப் பள்ளிகளின் பட்டியலையும் வழங்குகிறது. பின்னர் நீங்கள் உங்கள் அருகிலுள்ள மொழிப் பள்ளியைத் தேடி அங்கு பதிவு செய்யலாம். சில மொழிப் பள்ளிகள் ஆன்லைன் ஒருங்கிணைப்பு பாடநெறிகளை வழங்குகின்றன.

ஒருங்கிணைப்பு பாடநெறிகளை வழங்குவோரின் அனைத்து முகவரிகளையும் நீங்கள் முக்கிய முகவரிகளின் கீழ் காணலாம். அங்கு நீங்கள் உங்கள் அருகிலுள்ள மேற்படி பாடநெறி வழங்குனரை நேரடியாகத் தேடலாம். முகவரி அல்லது தொலைபேசி எண் போன்ற தகவல்களுடன் கூடிய தரவுகளை நீங்கள் ஒரு வரைபடத்தில் காண்பீர்கள்.

மதிப்பீட்டுச்சோதனை, விலை, மணித்தியாலங்கள் மற்றும் பரீட்சை

பதிவு செய்த பிறகு, நீங்கள் உங்கள் ஒருங்கிணைப்பு பயிற்சி வகுப்பில் ஒரு மதிப்பீட்டு சோதனையை எடுப்பீர்கள். இதன் மூலம் உங்களுக்கு பொருத்தமான பாடநெறி தெரிவுசெய்யப்படும். அதற்கான செலவு பொதுவாக ஒரு கற்பித்தல் மணி நேரத்திற்கு 2.29 யூரோக்கள் ஆகும். அனைத்து பங்கேற்பாளர்களும் பாடநெறிக்கான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மேலும் தகவல்களை புலம்பெயர்வு மற்றும் அகதிகள் கூட்டமைப்பு அலுவலகத்தில் பெறலாம். ஒருங்கிணைப்பு பாடநெறி ஒரு மொழி பாடநெறி மற்றும் ஆற்றுப்படுத்தும் பயிற்சி பாடநெறியைக் கொண்டுள்ளது.

சாதாரண மொழி பாடநெறியில் 600 கற்பித்தல் மணிநேரங்கள் உள்ளன. இங்கு பொருட்களை வாங்குதல், வீட்டுவசதி, குழந்தைகள், ஊடகம், பொழுதுபோக்கு, பள்ளி மற்றும் வேலை அல்லது மருத்துவரைச்சந்தித்தல் போன்ற அன்றாட தலைப்புகளுக்க்குச் சம்பந்தமான மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.

பாடநெறி முடிவில், நீங்கள் இறுதித் தேர்வை எழுத வேண்டும். தேர்வுக்குப் பிறகு, நீங்கள் ஒருங்கிணைப்பு பயிற்ச்சிக்கான சான்றிதழைப்பெறுவீர்கள்
இதன் மூலம் நீங்கள் A2 அல்லது B1 நிலையில் ஜேர்மன் மொழியை பேச, படிக்க மற்றும் எழுத முடியும். பல வேலை வாய்ப்பளிப்பவர்கள் இந்த சான்றிதழை விரும்புகிறார்கள். வெளிநாட்டவர் ஆணையம் போன்ற அலுவலகத்திலும் சில சமயங்களில் இது தேவைப்படும். நீங்கள் குடியுரிமை பெற விரும்பினால், அதாவது நீங்கள் ஜேர்மன் பிரஜை ஆக விரும்பினால், ஒருங்கிணைப்பு பாடநெறியின் சான்றிதழ் உதவியாக இருக்கும்.

மொழிப் பாடத்திற்குப் பிறகு, நீங்கள் ஆற்றுப்படுத்தும் பாடத்திட்டத்தை கற்க வேண்டும். இதில் 100 பாட நேரங்கள் உள்ளன. இங்கு ஜேர்மன் சட்ட ஒழுங்கு, வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி பல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். இதில் சமூகத்தில் ஒன்றாக வாழ்வது போன்ற முக்கியமான தலைப்புகளும் உள்ளன. இறுதியில், நீங்கள் "ஜேர்மனியில் வாழ்க்கை" என்ற இறுதித் தேர்வை எழுத வேண்டும்.

நீங்கள் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், நீங்கள் மேலும் 300 மணிநேர வகுப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் நீங்கள் தேர்வை மீண்டும் எழுதலாம்.

சிறப்பு ஒருங்கிணைப்பு படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த மொழி படிப்புகள்

27 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஒரு சிறப்பு ஒருங்கிணைப்பு பாடநெறி உள்ளது, இது இளைஞர் ஒருங்கிணைப்பு பாடநெறி ஆகும். நீங்கள் ஒரு தொழிற்பயிற்சியை மேற்கொள்ள விரும்பினால் இது உங்களுக்கு உதவும். தகவல்களை நீங்கள் புலம்பெயர்வு மற்றும் அகதிகள் கூட்டமைப்பிடமிருந்து பெறலாம். சில நகரங்களில் சில சிறப்பன பிரத்தியேகமானபாடநெறி வழங்கல்கள் உள்ளன, எடுத்துக்காட்டாக பெண்களுக்கான பாடநெறிகள், எழுத்தறிவு பாடநெறிகள் அல்லது குழந்தை பராமரிப்புடன் கூடிய பாடநெறிகள். மேலதிகத்தகவல்களை உங்கள் மொழிப்பள்ளியில் கேளுங்கள்.

நீங்கள் வேலை தேடுகிறீர்களா அல்லது உங்கள் வேலைக்காக உங்கள் ஜேர்மன் மொழியை மேம்படுத்த விரும்புகிறீர்களா? அப்படியாயின் நீங்கள் ஒரு தொழில் மொழி பாடநெறியை மேற்கொள்ளலாம். இங்கு நீங்கள் தொழிலுக்கான ஜேர்மன் மொழியைக் கற்றுக்கொள்வீர்கள்.

ஒரு தொழில் மொழி பாடநெறியை கற்கத்தொடங்குவதற்கு முன், நீங்கள் ஏற்கனவே ஜேர்மன் மொழியைப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைப்பு பாடநெறியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
தொழில் முகவர், தொழில் மையம் அல்லது உங்கள் முதலாளியிடம் கேளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

எங்களை பின்தொடருங்கள்