காப்பீடுகள்

Auto mit Schaden an hinterer Türe © Goethe-Institut/ Gina Bolle

யார் வேண்டுமானாலும் நோய்வாய்ப்படலாம் அல்லது வேலையை இழக்கலாம். மற்ற விஷயங்களும் நடக்கலாம். எனவே நாம் ஆபத்துகளுடன் வாழ்கிறோம். இந்த அபாயங்கள் விலை உயர்ந்ததாக இருக்கலாம். அதற்காகத்தான் காப்பீடு. உதாரணமாக, விபத்து ஏற்பட்டால் ஏற்படும் செலவுகளில் ஒரு பகுதியையோ அல்லது அனைத்தையும் இது ஈடுகட்டுகிறது.

Audio-Player: Artikel anhören

Artikel anhören

Versicherungen

வெவ்வேறு வகையான காப்பீடுகள்

ஒவ்வொரு மனிதரும் நோய்வாய்ப்படக்கூடும் அல்லது வேலையை இழக்கக்கூடும் அல்லது ஏதாவது வேறு விடயங்களும் நடக்கலாம். ஆகவே, நாம் அபாயங்களுடன் வாழ்கிறோம். இந்த அபாயங்கள் எமக்கு அதிக செலவைத்தர முடியும்.. அதற்காகவே காப்பீடுகள் உள்ளன. உதாரணமாக, ஒரு விபத்தில் நீங்கள் செலவாகும் தொகையை ஒரு பகுதி அல்லது முழுவதையும் காப்பீடு செலுத்தும்.

ஒரு காப்பீட்டில் முன்கூட்டியே கையெழுத்திட வேண்டும். நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து, ஒவ்வொரு மாதமும் அல்லது வருடத்தில் ஒரு முறையாய் காப்பீட்டு நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும்.

ஜேர்மனியில் சில காப்பீடுகள் கட்டாயமாக இருக்கும்: இந்த காப்பீடுகளை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. மற்ற காப்பீடுகள் விருப்பமானவை: நீங்கள் விரும்பினால் இந்த காப்பீடுகளை நீங்கள் பெறலாம்.

சமூக காப்பீடு

ஜேர்மனியில் நல்ல சமூக பாதுகாப்பு உள்ளது. நீங்கள் ஒரு வேலைசெய்பவராக இருந்தால், நீங்கள் சமூக காப்பீடு திட்டத்தில் பங்கேற்க வேண்டும். "தொழில் ஆரம்பித்தல்" என்ற எங்கள் உரையில் இதுகுறித்து மேலும் படிக்கவும். காப்பீட்டிற்கு செலுத்தப்படும் பணம் உங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும். நீங்கள் தனியாக அந்த பணத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை. உங்கள் தொழில் வழங்குனரே அதன் பாதி தொகையை செலுத்துவார். இந்த பணம் சம்பளத்தின் அடிப்படையில் இருக்கும். அதிக சம்பளம் பெறுபவர்கள் அதிகம் செலுத்துவர். குறைந்த சம்பளம் பெறுபவர்கள் குறைவாக செலுத்துவர். இதன் மூலம் குறைந்த பணம் கொண்டவர்களும் பாதுகாப்பு பெற முடியும்.

சமூக காப்பீட்டில் சட்டபூர்வமான மருத்துவ காப்பீடு, சட்டபூர்வமான பராமரிப்பு காப்பீடு, சட்டபூர்வமான விபத்து காப்பீடு, சட்டபூர்வமான ஓய்வு காப்பீடு மற்றும் சட்டபூர்வமான வேலை இழப்பு காப்பீடு அடங்கும். இந்த காப்பீடுகளில் அனைவரும் சமமாக நடத்தப்படுவர். அவர்கள் எவ்வளவு செலுத்தினாலும், அனைவரும் ஒரே அளவிலான சேவைகளைப் பெறுவார்கள்.

நீங்கள் சொந்த தொழிலாளராக இருந்தால், அதாவது உங்கள் சொந்த நிறுவனத்தை வைத்திருப்பவராக இருந்தால், நீங்கள் சட்டபூர்வமான சமூக காப்பீட்டிற்கு பங்கிட மாட்டீர்கள். நீங்கள் உங்கள் தனிப்பட்ட காப்பீடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். வேலை இல்லாதவர்கள் அல்லது குறைந்த தொழில்நுட்ப வேலை (மினிஜோப்ஸ்) கொண்டவர்கள் சமூக காப்பீடு செலுத்த மாட்டார்கள்.

மருத்துவ காப்பீடு

ஜேர்மனியில் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு என்பது கட்டாயம். நீங்கள் மருத்துவரிடம் செல்லும் போது, மருத்துவமனைக்குப் போக வேண்டியிருக்கும் போது அல்லது மருந்துகள் தேவைப்படும் போது, இது செலுத்தும். சட்டபூர்வமான மற்றும் தனியார் மருத்துவ காப்பீடுகள் உள்ளன. ஒரு நிரந்தர வேலை கொண்டவர்கள் பொதுவாக சட்டபூர்வமான மருத்துவ காப்பீட்டில் உறுப்பினராக இருப்பார்கள். சட்டபூர்வமான மருத்துவ காப்பீட்டில் உங்கள் பிள்ளைகளையும் இலவசமாக சேர்க்கலாம். இது உங்கள் கணவருக்கும் அல்லது மனைவிக்கும் பொருந்தும்,முகியமாக அவர்களுக்கு வேலை இல்லாவிடில் அல்லது குறைவாக சம்பாதிப்பவராக இருந்தால் இக்காப்பீடு உதவியாக இருக்கும்.

சொந்தமாக வேலை செய்வோர் சட்டபூர்வமாக காப்பீடு செய்ய முடியும். அல்லது அவர்கள் தனியார் மருத்துவ காப்பீடு எடுக்க முடியும். சில தொழில்நுட்பக் குழுக்களும் நிரந்தர வேலை கொண்டவர்களாக இருப்பவர்கள் தனியார் மருத்துவ காப்பீடு கொண்டிருக்கின்றனர், உதாரணமாக ஆசிரியர்கள். பெரும்பாலும், தனியார் மருத்துவ காப்பீடு மிகவும் நல்ல சம்பளம் பெறும் நபர்களுக்கே பயனுள்ளதாக இருக்கும்.

மருத்துவ காப்பீட்டிலிருந்து நீங்கள் ஒரு மருத்துவ காப்பீட்டுஅட்டையைப் பெறுவீர்கள். அதைக் கொண்டு நீங்கள் மருத்துவ உதவிக்கு செல்லும் போது, அதை எப்போதும் எடுத்துச் சென்று அதைக்காட்ட வேண்டும்.

வேறு அவசிய பொதுக் காப்பீடுகள்

வேலை இழந்ததும், புதிய வேலை கிடைக்காமல் இருந்தாலும், நீங்கள் உங்களது வேலை இழப்புக் காப்பீட்டிலிருந்து பணம் பெறலாம். நீங்கள் எவ்வளவு காலமாக பணியாற்றியுள்ளீர்கள், எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளீர்கள் என்கிற பல காரணிகளின் அடிப்படையில், எவ்வளவு காலம் மற்றும் எவ்வளவு பணம் பெற முடியும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இது வேலை இழப்பு உதவித்தொகைக்கு உரிமையுள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஓய்வூதியக் காப்பீடு என்பது பணியாளர்களுக்கான கட்டாய காப்பீடு ஆகும். நீங்கள் முதிர்ந்தபோது, வேலை செய்ய முடியாது. அப்போது, ஓய்வூதியக் காப்பீடு உங்களுக்கு வாழ்க்கைக்கான பணத்தை செலுத்தும்.

பணியாளர்கள் விபத்து காப்பீட்டையும் கொண்டிருப்பார்கள். இது உங்களுக்குப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு அல்லது வேலை காரணமாக நோயுற்றால் செலுத்தப்படும்.

பராமரிப்பு காப்பீடு என்பது நீண்டகால பராமரிப்பு தேவைப்படும் போது பணம் செலுத்தப்படும். பெரும்பாலும் இது மிகவும் வயதானவர்களுக்கு ஆகும். ஆனால், இத்தகைய காப்பீடு இளம் நபர்களுக்கும் தேவையாகலாம். உதாரணமாக, அவர்களுக்கு கடுமையான விபத்து ஏற்பட்டால்.

இந்த காப்பீடுகள் சுய தொழிலாளர்களுக்கு பொருந்தாது. அவர்கள் இந்த காப்பீடுகளைத் தவிர்த்து செல்லலாம். ஆனால் அவர்கள் விரும்பினால், தாங்கள் விருப்பமாக காப்பீடு செய்துகொள்ளலாம்.

நீங்கள் ஒரு காரோ அல்லது மோட்டார்சைக்கிளோ வைத்திருப்பவராக இருந்தால், உங்களுக்கு **கார் காப்பீடு** அவசியமாக இருக்கும். நீங்கள் ஒரு விபத்தில் சிக்கினால் மற்றும் மற்றொரு கார் சேதமாகினால், கார் காப்பீடு அந்த சீரமைப்புக்கான பணத்தை செலுத்தும் அல்லது ஒரு பகுதியை செலுத்தும்

விருப்பமான காப்பீடுகள்

அதிகபட்சமான விருப்பமான காப்பீடுகள் உள்நாட்டு கடன் காப்பீடு மற்றும் தொழில் சார்ந்த இயலாமைக்கான காப்பீடு ஆகும். நீங்கள் மற்றொரு நபரின் அதிவிலைகூடிய பொருளை சேதப்படுத்தினால், அந்த சமயத்தில் உள்நாட்டு கடன் காப்பீடு செலுத்தும். இது அதிகமாக செலவிடப்படாத காப்பீடு ஆகும்.

உங்களிடம் ஒரு நாய் உள்ளதா அப்படியாயின் நீங்கள் உள்நாட்டு கடன் காப்பீட்டைக்கொண்டிருக்க வேண்டும்.

தொழில் சார்ந்த இயலாமைக்கான காப்பீடு எப்படி செயல்படும் என்பதைப் பார்ப்போம்: நீங்கள் கடுமையாக நோயுற்று வேலை செய்ய முடியாதபோது, உங்கள் சம்பளம் இல்லை. இது மிகவும் கஷ்டமானது. அந்த சமயத்தில் தொழில் சார்ந்த இயலாமைக்கான காப்பீடு உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்கிறது. தொழில் சார்ந்த இயலாமைக்கான காப்பீடு கொஞ்சம் விலையாக இருக்கும். நீங்கள் அதிகம் செலுத்தினால், அதிகமான பணம் பெறுவீர்கள். குறைத்து செலுத்தினால், குறைவாக பணம் பெறுவீர்கள்.

வீட்டு பொருட்கள் காப்பீடு மற்றும் வாழ்க்கை காப்பீடும் பயனுள்ளதாக இருக்க முடியும். வீட்டு பொருட்கள் காப்பீடு என்பது வீட்டின் பொருட்கள் சேதமாகினால், உதாரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பணத்தை செலுத்தும். வாழ்க்கை காப்பீடு என்பது நபர் மரணமானால், அந்த பணம் அவருடைய குடும்பத்தினருக்கு செலுத்தப்படும். உதாரணமாக, பிள்ளைகளுக்கு.

சட்டபூர்வ ஓய்வூதியக் காப்பீடு பெரும்பாலும் அதிக பணம் செலுத்துவதில்லை. அதனால், தனியார் ஓய்வூதியக் காப்பீடு உள்ளது. மேலுமொரு ஓய்வூதிய காப்பீடு உங்களுக்கு அப்போது உதவியாக இருக்கும், இதனால் நீங்கள் முதிர்ச்சில் நல்ல வாழ்க்கை வாழ முடியும். அரசு சில தனியார் ஓய்வூதிய காப்பீடுகளை ஆதரிக்கிறது.

மற்ற பல காப்பீடுகளும் உள்ளன அவை உங்கள் வாழ்வியலுக்கும் தேவைக்கு ஏற்ப உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், அவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாகவும் பரிசீலித்து எடுக்க வேண்டும். அவை அனைத்தும் பணம் செலுத்த வேண்டும். உதாரணமாக, தனியார் விபத்து காப்பீடு பொழுதுபோக்கு நேரங்களில் விபத்து ஏற்படின் பணத்தைச்செலுத்தும்.சட்ட உதவி காப்பீடு என்பது உங்களுக்கு சட்ட ஆலோசனை தேவைப்பட்டால், அதற்கான பணத்தை உங்கள் வழக்கறிஞருக்குச் செலுத்தும்.செலுத்தும்.

பயணம், பற்கள், கண்ணாடி, கடன் அல்லது கைபேசிகளுக்கு காப்பீடுகள் உள்ளன. இவற்றின் அபாயத்தைக் கணக்கிட்டு, நீங்கள் எந்த காப்பீடு தேவை என்பதை முடிவெடுக்க வேண்டும். பலவற்றுக்கு நீங்கள் தனியே பணத்தைச்செலுத்தலாம். அதற்காக காப்பீடு அவசியம் இல்லை.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்களை பின்தொடருங்கள்