பணியாளர்கள் ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். நீங்கள் மற்றும் தொழில் வழங்குனர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். வேலை ஒப்பந்தத்தை கவனமாக படிக்கவும், அதன் பிறகு கையெழுத்திடவும்.
உங்களுக்கு நிச்சயமில்லை என்றால், கீழ்காணும் இடங்களில் உதவி கேட்கலாம்:
- குடிபெயர்ந்த வளர்ந்தோருக்கான ஆலோசனைமையம் “MBE”
- 27 வயதிற்குள் உள்ள இளைஞர்களுக்காக, குடிபெயர்ந்த இளவயதினருக்கான ஆலோசனைமையம். (JMD)
- மேலும், நீங்கள் சமூகத்தொழிளாலர் துறைத் தொலைபேசி எண்ணுக்கு +49 30 221 911 004 அழைக்கலாம், இதில் "பணியாளர் சட்டம்" பற்றிய கேள்விகளை கேட்கமுடியும
வேலை ஒப்பந்தத்தில் அனைத்து விதிமுறைகளும் உள்ளன. நீங்கள் மற்றும் தொழில் வழங்குனர் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, ஒப்பந்தத்தில் எவ்வளவு சம்பளமாகும், எத்தனை விடுப்பு நாட்கள் உண்டு, நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பன குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்பில், வழக்கமாக ஒரு தகுதி காண் காலம் இருக்கும். இது சில வாரங்கள் அல்லது ஆறு மாதங்கள் வரை இருக்கக்கூடும். இந்த காலத்தில், தொழில் வழங்குனர் உங்களை கவனமாகப் அவதானிப்பார். மேலும் அவர் இந்த காலம் முடிந்த பின் உங்களுக்கு தொடர்ந்தும் வேலை கொடுக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பார். இதேபோல், நீங்களும் இந்த வேலையை தொடர விரும்புகிறீர்களா என்பதையும் முடிவு செய்யலாம். சோதனை காலத்தில், இரு தரப்புகளும் குறைந்த முறை (2- 3வாரங்களில்) முடிவு செய்ய முடியும். இதற்கு பிறகு, உங்கள் பணி சரியாக 3 மாதங்களுக்குள் முடிவுக்கு வரும்.
இரு வகையான ஒப்பந்தங்கள் உள்ளன: காலக்கேடு கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் காலக்கேடு இல்லாத ஒப்பந்தங்கள். காலக்கேடு கொண்ட ஒப்பந்தம் குறிப்பிட்ட காலம் முடிவடையும் போது தானாக முடிவடைகின்றது. பணியாளர் இடைநிறுத்தம் செய்ய தேவையான அறிவிப்பை நபர் நிறுவனத்தில் எழுத தேவையில்லை. வேலை நேரம், விடுமுறை, நோய் மற்றும் பணியிட ஒழுங்குகளை பற்றிய மேலும் விவரங்களை "
என் வேலைத்தளம்" என்ற உரையில் காணலாம்.