சிறுவர் பராமரிப்பு

Schild mit Aufschrift "Kindergarten" © Goethe-Institut/ Gina Bolle

நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் குழந்தைக்கு பராமரிப்பு தேவை. பராமரிப்பு என்பது: யாராவது உங்கள் குழந்தையை கவனிக்கின்றனர். பல்வேறு வாய்ப்புகள் உள்ளன: குழந்தைகள் பராமரிப்பு மையம், விளையாட்டு குழு, தினசரி குழந்தை பராமரிக்கும் தாய்/தந்தை, மழலையர் வகுப்பு அல்லது மத்திய உணவு பராமரிப்பு.

Audio-Player: Artikel anhören

Artikel anhören

Kinderbetreuung

மழலையர் வகுப்பு – சேர்ந்து விளையாடுவது, சேர்ந்து கற்றுக்கொள்வது

ஜேர்மனியில் பல குழந்தைகள் மழலையர் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் மற்ற குழந்தைகளுடன் விளையாடி, புதிய நண்பர்களைச் சந்திக்கின்றனர். உங்கள் குழந்தை உங்கள் வீட்டிலும் இருக்க முடியும். ஆனால், மழலையர் பள்ளிகளில் பல பயன்கள் உள்ளன. உங்கள் குழந்தை அங்கு ஜேர்மன் மொழி மற்றும் மற்ற விஷயங்களை கற்றுக்கொள்கின்றது

நகரங்கள் மற்றும் மாகாணங்கள், அவற்றின் அளவிற்கு ஏற்ப பல மழலையர் பள்ளிகளை வழங்குகின்றன. சில கட்சிகள், ஆலயங்கள் அல்லது பிற அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன, உதாரணமாக, கரிடாஸ். தனியார் மழலையர் பள்ளிகள் மற்றும் பெற்றோர் முன்னெடுத்த அமைப்புகளும் உள்ளன. ஒரு பெற்றோர் முன்னெடுத்த அமைப்பை பெற்றோர் நிறுவுகின்றனர். சில மழலையர் பள்ளிகள் இரு மொழிகளில் பயிற்சி அளிக்கின்றன, உதாரணமாக, ஜ்ர்ர்ர்மன் மற்றும் ஸ்பானிஷ். மேலும், சில மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் முழு நாள் வெளியில் இருப்பார்கள்

செலவுகள்

பெரும்பாலான மழலையர் பள்ளிகளுக்கு பணம் செலுத்த வேண்டும். தனியார் மழலையர் பள்ளிகளில் பொதுவாக அரசாங்க மழலை பள்ளிகளை விட அதிக பணம் செலவாகும்.செலவுகள் மாநிலங்களுக்கிடையில் மாறுபடுகின்றன. மற்றும் ஒவ்வொருவரும் அதே அளவு செலுத்த வேண்டியதில்லை. அது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்? உங்கள் குழந்தையின் வயது என்ன? மற்றும் குழந்தை எவ்வளவு மணி நேரம் மழலையர் பள்ளியில் இருக்கின்றது? சில மாநிலங்களிலும் நகரங்களிலும் குழந்தை பராமரிப்பு இலவசமாக வழங்கப்படுகின்றது. இது சில நேரங்களில் அனைத்து பராமரிப்பு இடங்களுக்கும் பொருந்தும், ஒருசில சந்தர்ப்பங்களில் அது மழலையர் பள்ளிக்கு மட்டுமே பொருந்துகிறது. பெரும்பாலும், குழந்தைகள் மழலையர் பள்ளியில் உணவு மற்றும் பானங்களை பெறுகின்றனர். இதற்காக நீங்கள் மாதாந்தம் ஒரு தொகையை செலுத்த வேண்டும். உங்கள் ஊதியம் குறைவு என்றால், உதவி உள்ளது. நீங்கள் வேலை மையம் அல்லது சமூக அலுவலகத்தில் கேட்கலாம்.

பதிவு செய்தல்

2013 முதல், 12 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மழலையர் பள்ளிக்குக்கு செல்ல உரிமை உள்ளது. அதாவது: ஒவ்வொரு குழந்தையும் 1 வயதுக்கு மேலாக இருந்தால், பெற்றோர் விரும்பினால், மழலையர் பள்ளிக்கு செல்ல முடியும். ஆனால், இது பெரும்பாலும் முடியாது. ஜேர்மனியில் மழலையர் பள்ளிக்கு வேலையாட்கள் குறைவாக உள்ளன. நீங்கள் எளிதாக பதிவு செய்ய வேண்டும். உங்கள் குழந்தையை பல மழலையர் பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும். உங்கள் குழந்தைக்கு இடம் கிடைக்காவிட்டால், நீங்கள் முறைப்படி அதற்காக முறையிடலாம். அதாவது: ஒரு நீதிமன்றம் இதற்கு உரிய தீர்வை முடிவு செய்யும். உதாரணமாக, நீங்கள் பராமரிப்பு இடம் இல்லாமல் வேலை செய்ய முடியவில்லை அல்லது குறைவாக வேலை செய்ததால் உங்கள் ஊதியம் குறைவு என்பதை தெரியப்படுத்தலாம்.

3 ஆண்டுகளுக்கு குறைந்த குழந்தைகள்

நீங்கள் மற்றும் உங்கள் துணைவர்/ துணைவி வேலை செய்கிறீர்கள், மேலும் உங்களுக்கு சிறிய குழந்தை (சில மாதங்களிலிருந்து 3 ஆண்டுகள் வரை) இருக்கின்றது என்றால், நீங்கள் உங்கள் குழந்தையை குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு விட முடியும். குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் இடங்கள் மிக குறைவாக உள்ளன. பெரும்பாலும், பெற்றோர்கள் குழந்தைகளை கர்ப்பமாக இருக்கும் போதே பதிவு செய்கிறார்கள்.

உங்கள் குழந்தை ஒரு தினசரி குழந்தை பராமரிக்கும் தாய் அல்லது தினசரி குழந்தை பராமரிக்கும் தந்தையிடம் இருக்க முடியும். இது அவர்களின் வீட்டில் நடக்கும் அவர்கள் குழந்தைகளை சிறிய குழுக்களாக பராமரிக்கின்றனர்.

உங்களுக்கு ஒவ்வொரு நாளும் குழந்தை பராமரிப்பு தேவையில்லையா? ஆனால் உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா?
இதற்கு விளையாட்டு குழுக்கள் உள்ளன. பெற்றோர்களும், குழந்தைகளும் இந்த குழுக்களை சேர்ந்து செல்ல முடியும். அல்லது குழந்தைகள் அங்கு சில மணி நேரங்கள் மட்டுமே பராமரிக்கப்படுகிறார்கள். மேலும், சிறுவர்களுக்கான பிற பெற்றோர்-குழந்தை திட்டங்களும் உள்ளன, உதாரணமாக, குழந்தைநீச்சல், கூட்டு பாடல் அல்லது உடல் அசைவுகளுக்கான பயிற்சி .அங்கு நீங்கள் பிற பெற்றோர்களை சந்திக்க முடியும்.

மழலையர் பள்ளி

3 வயதிலிருந்து பள்ளி தொடங்கும் வரை குழந்தைகள் மழலையர் பள்ளிகளிக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் விளையாட, பாட, வரைய மற்றும் பலவற்றைக் கற்கிறார்கள் பெரும்பாலான மழலையர் பள்ளிகளிகளுக்கு ஒரு பெரிய தோட்டம் உள்ளது. பல மழலையர் பள்ளிகளில், ஆசிரியர்கள் குழந்தைகளுடன் கோடையில் வெளியில் அல்லது சுற்றுலா செல்கின்றனர்.

பத்து வயதுக்குள் அனைத்து குழந்தைகளும் மழலையர் பள்ளிகளிகளுக்கு செல்ல வேண்டும். இது பள்ளிக்கு முன் முக்கியமான ஆயத்தமாகும் பல மழலையர் பள்ளிகளில் மொழி முன்னேற்றம் வழங்கப்படுகிறது. இது, இன்னும் ஜேர்மன் மொழி நன்றாக பேச முடியாத குழந்தைகளுக்கு உதவுகிறது. சில நேரங்களில், ஜேர்மன் மொழி ஜேர்மன் குழந்தைகளுக்கும் கடினமாக இருக்கலாம். ஆசிரியர்கள் உதாரணமாக, குழந்தைகளுடன் மொழி விளையாட்டுகள், கதைகள் மூலம் குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறார்கள்

மழலையர் பள்ளிகளிகள் சிறிய ஊர்களிலும் உள்ளன. உங்கள் குழந்தையை வேகமாக மழலையர் பள்ளிகளிகளுக்கு பதிவு செய்யுங்கள். இங்கு அதிக இடங்கள் கிடைக்காது.மழலையர் பள்ளிகளில் உங்கள் குழந்தை நண்பர்களை சந்திக்கின்றது, ஜேர்மன் மொழி பேசுவதனால் அந்நாட்டைப்பற்றி விரைவாக அறிந்து கொள்ளலாம்.

சில மழலையர் பள்ளிகளிகள் மதிய வேளை மட்டும் திறந்திருக்கும் (காலையில் 7 அல்லது 8 மணி முதல் 12 அல்லது 13 மணி வரை). மற்ற மழலையர் பள்ளிகளிகள் முழு நாளும் திறந்திருக்கும் (காலை7 அல்லது 8 மணி முதல் 16 அல்லது 17 மணி வரை)

பள்ளி செல்லும் குழந்தைகள்

6 அல்லது 7 வயதிற்கு பிறகு, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இது கட்டாயமாகும். இதற்கான மேலதிக தகவலுக்கு, எங்கள் "பள்ளி அமைப்பு" என்ற தகவல் உரையைப் படிக்கவும்.
நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் குழந்தை முழு நாள் பள்ளி அல்லது பள்ளிக்கு பிறகு பராமரிப்பிற்கு அல்லது மதிய பராமரிப்பில் செல்ல முடியும். பெரும்பாலும், உங்கள் குழந்தை அங்கு மதிய உணவு பெற முடியும். குழந்தை பராமரிப்பில், உங்கள் குழந்தை 16 அல்லது 17 மணி வரை இருக்க முடியும். மதிய பராமரிப்பு பெரும்பாலும் குறைந்த நேரத்திற்கு மட்டுமே இருக்கும்.

அடிக்கடி கெட்கப்படும் கேள்விகள்

எங்களை பின்தொடருங்கள்