பயிற்சிக்கு 2 வகையான தொழில்முறை பயிற்சிகள் உள்ளன: பள்ளியை அடிப்படையாகக்கொண்ட பயிற்சி மற்றும் இரட்டைப்பயிற்சி.
பள்ளி சார்ந்த தொழில்முறை பயிற்சி: இந்த பயிற்சி ஒரு தொழில் பள்ளியில் தான் நடத்தப்படுகிறது. இதற்கு ஒரு பள்ளியின் முடிவு தேவை, மேலும் சில நேரங்களில், மேலதிக அனுபவம், உதாரணமாக ஒரு பயிற்சி அல்லது ஒரு துறையில் அனுபவம் தேவைப்படுகிறது.
இரட்டை தொழில்முறை பயிற்சி
இதையே தொழில் சார்ந்த தொழில்முறைப்பயிற்சி என்று கூறவும் முடியும்.. ஜேர்மனியில் பெரும்பாலான தொழில்முறை பயிற்சிகள் இரட்டை பயிற்சியாக உள்ளன. இதில், ஒரு செய்முறை மற்றும் ஒரு எழுத்துப் படிப்புகளாக இரண்டு பகுப்புகள் உள்ளன.
எழுத்துப்படிப்புப்பகுதி : தொழில் பள்ளி இல் போய், தொழிலைப் பற்றிய கருத்தியலைக்கற்றுக்கொள்ள வேண்டும்.
இதில், சில பொது பாடங்களையும் கற்றுக் கொள்வீர்கள், உதாரணமாக ஜேர்மன் மொழி, அரசியல் அல்லது விளையாட்டு.
செய் முறைப்பகுதி: இதில், நீங்கள் நேரடியாக ஒரு நிறுவனத்தில் பயிற்சி எடுக்க வேண்டும். இதில் 3 முதல் 4 நாட்கள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும். இந்த வகையில் பயிற்சி செய்யும் போது, நீங்கள் 3 முதல் 4 நாட்கள் நிறுவனத்தில் வேலை செய்வதாக இருந்தாலும், தொழிற்பள்ளியில் இல் 8 முதல் 12 மணி நேரம் கற்றுக்கொள்வீர்கள். அல்லது சில வாரங்கள் நிறுவனத்தில் இருக்கலாம், பிறகு சில வாரங்கள் தொழிற்பள்ளியில் கற்கலாம்.
பயிற்சியின் முதல் பாதி முடிந்தவுடன், மத்திய பரிசோதனை செய்ய வேண்டும். இதில், பயிற்சியாளர்கள் அவர்கள் கற்றதை வெளிப்படுத்துகிறார்கள்.
பயிற்சியின் முடிவில் முடிவுப் பரிசோதனை செய்ய வேண்டும். இது முடிந்தவுடன், பயிற்சியாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது, பின்னர் வேலைக்கான விண்ணப்பங்களில் மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும்.
மேலும் தகவலுக்கு, "
வேலை தேடல்" உரையை பாருங்கள்.