இது உங்கள் சொந்த நாடு, உங்கள் தகுதிகள் மற்றும் உங்கள் வயதின் அடிப்படையில் இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியுரிமை அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி மற்றும் சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர்கள், விசா மற்றும் வேலை அனுமதி இல்லாமல் ஜேர்மனியில் வேலை செய்ய முடியும்.
ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், கனடா, தென் கொரியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வடக்கு ஐர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள், விசா இல்லாமல் ஜேர்மனிக்கு வர முடியும், ஆனால் வேலை அனுமதி பெற வேண்டும். இதை நீங்கள் ஜேர்மனியில் உள்ள வெளிநாட்டு அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.
நீங்கள் மெற்குப்பிட்ட நாடுகளைத்தவிர்ந்த வேறு நாட்டிலிருந்து வந்தால், நீங்கள் விசா பெற வேண்டும்.
ஜேர்மனியில் வேலை செய்ய விசா பெற நீங்கள் ஜேர்மன் தூதரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் வேலை அனுமதியும் சேர்க்கப் பட்டிருக்கும், தற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
விசா பெறும் பொது நீங்கள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
- ஒரு குறிப்பிட்ட வேலை வாய்ப்பு அல்லது வேலை ஒப்பந்தம்: நீங்கள் வேலை செய்யப்போகும் நிறுவனம், பணியாளர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விதிமுறைகள் மற்றும் சம்பளம் சரியானதாக இருக்குமா என்று வெளிநாட்டு அலுவலகம், வேலைவாய்ப்பு பணியகம் மூலம் சரிபார்க்கும். இதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
- உங்கள் தொழில்முறை தகுதிகளின் அங்கீகாரம்: நீங்கள் ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட தொழிலை (பதிவு செய்யப்பட்ட வேலை) செய்யப்போகிறீர்களா? உதாரணமாக, மருத்துவர், ஆசிரியர், அல்லது மருத்துவப் பராமரிப்பு பணியாளர்
அப்படியாயின், உங்கள் தொழில்முறை தகுதிகள் அங்கீகாரம் பெற வேண்டும்.
இதை ஜேர்மனியில் அங்கிகாரம் பெறல் இணையதளத்தில் பார்க்கவும்.
ஜேர்மனியில் அங்கீகாரம் பெறும் நடைமுறைக்கும் விசா உள்ளது.
நீங்கள் ஒழுங்கு படுத்தப்படாத தொழிலை செய்வீர்களானால், ஜேர்மனியில் அங்கிகாரம் பெறுவதற்கு இலகுவான படிமுறைகள் உள்ளன.
மேலதிகத்தகவல்களுக்கு: