குழந்தைகளுடன் வாழ்வு

Kinderfahrrad und Schuhe vor einer Wohnungstüre © Goethe-Institut/ Gina Bolle

குடும்பம் மிகவும் முக்கியமானது. அது அன்பும், ஆதரவும், ஒன்றிணைதலையும் தருகிறது. ஜேர்மனியில் பலவகையான குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பமும் வேறுபட்டது.

Audio-Player: Artikel anhören

Artikel anhören

Leben mit Kindern

குடும்ப வாழ்க்கை

பல குடும்பங்களில், இரு பெற்றொர்களும் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்துகிறார்கள். பல சமயங்களில் பெரும்பாலும் தாயார் குறைவாக வேலை செய்து குழந்தைகளுடன் அதிக நேரம் கழிக்கிறார். ஆனால் தற்போது பெரும்பாலான தந்தையர்களும் ஒரு காலகட்டத்திற்கு வேலை செய்யாமல், குழந்தைகளுடன் நேரம் செலுத்துகிறார்கள்.

சில பெற்றோர்கள் பிரிந்துவிடுகிறார்கள். அவர்கள் பிரிந்தும் அவர்கள் ஒரே வீட்டில் வாழ்வதில்லை என்றாலும் குழந்தைகளில் சேர்ந்து கவனம் செலுத்துகிறார்கள். அதேபோல், ஒரே ஒரு பெற்றோர் மட்டும் குழந்தைகளை வளர்ப்பவராக இருக்கக் கூடும். இதை தனி பெற்றோர் என்று அழைக்கின்றனர். சில குடும்பங்களில் இரண்டு தாய்கள் அல்லது இரண்டு தந்தைகள் இருக்கின்றன, இது வானவில் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது. பல குடும்பங்களில், பல்வேறு பெற்றோர்களின் குழந்தைகள் சேர்ந்து வாழ்கிறார்கள், இதை ஒட்டுவேலை குடும்பம் என்று அழைக்கின்றனர். மேலும், சில குடும்பங்களில் நெருங்கிய உறவினர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் குழந்தைகளை பராமரிக்கின்றனர், இதை பராமரிப்பு குடும்பம் என்று அழைக்கின்றனர்.

கர்ப்பம்

குழந்தைகளுடன் வாழ்வது கர்ப்ப காலத்தில் தொடங்குகிறது. நீங்கள் கர்ப்பம் தொடர்பாக கேள்விகள் இருப்பின், கர்ப்ப பரிசோதனை ஆலோசனையில் செல்ல முடியும்.

கர்ப்பத்தில், நீங்கள் பொதுவாக ஒரு பெண்சிகிச்சை மருத்துவரிடம் சென்று தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டும். அவர் அல்லது அவள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து, உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பரிசோதித்து உதவுவார். ஒரு பேறுகால உதவியாளரும் இதேபோல் உதவுவார். அவர் உங்களின் கர்ப்பத்திலும் மற்றும் குழந்தை பிறந்த பின்னரும் உதவி செய்வார்.

பிறப்பின் போது, உங்கள் மருத்துவர் உங்களுக்கு பேறுகால உதவியாளர் அல்லது பெண்சிகிச்சை மருத்துவரை தேர்வு செய்ய உதவி செய்ய முடியும். பல பெண்கள் பிறப்புக்கு முன்பு "பிறப்பு பயிற்சி வகுப்புக்கு" செல்வார்கள். இந்த வகுப்பில் பிறப்புக்கு முன் குறிப்பிட்ட உதவிகள், குறிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த வகுப்பில் உள்ள மற்றைய கர்ப்பிணிகளுடனும் தொடர்பு கொள்ளலாம்.

மகப்பேறு விடுப்பு, பெற்றோர் விடுப்பு மற்றும் மற்றும் பெற்றோர் உதவிபணம்

நீங்கள் ஒரு நியமிக்கப்பட்ட நிரந்தரமான வேலை வாய்ப்பைக்கொண்டிருந்தால், பிறப்புக்கு முன் மகப்பேறு விடுப்பை எடுக்க முடியும். இந்த காலத்தில் நீங்கள் வேலை செய்ய வேண்டியதில்லை. பெரும்பாலான தொழில்களில் இது பிறப்புக்கு முன்பு ஆறாம் வாரம் துவங்குகிறது. மகப்பேறு விடுப்பு ஆனது குறைந்தபட்சம் 14 வாரங்கள் ஆகும்.. இது நீடிக்கக்கூடியது. இந்த காலத்தில் உங்கள் தொழில் வழங்குனரால் உங்களுக்கு வேறு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.

மகப்பேறு விடுப்பின் பின் நீங்கள் பெற்றோர் விடுப்பபை எடுத்துக்கொள்ளலாம். பெற்றோர் தங்கள் குழந்தையை கவனிக்க வீட்டில் இருக்க முடியும். இந்த விடுப்பு, 3 ஆண்டுகளுக்குள் நீடிக்கக்கூடியது. ஆனால் நீங்கள் 1 அல்லது 2 ஆண்டுகள் மட்டும் பெற்றோர் விடுப்புக்கு செல்ல முடியும். குழந்தையின் 8வது பிறந்த நாளுக்கு பிறகும், வேலைக்கு திரும்பலாம். இது ஒவ்வொரு பெற்றோரையும்சார்ந்தது. இதன் பின் நீங்கள் வேலைத்தளத்திற்குச் செல்லலாம்.

எப்போதும் வாழ்க்கை மற்றும் வேலையை இணைப்பது எளிதல்ல. ஜேர்மனியில் பெற்றோர் உதவிப்பணம் உள்ளது. இது புதிய இளங்குடும்பங்களுக்கு உதவுகிறது . பெற்றோர் விடுப்பின் முதல் 12 மாதங்களில் இந்த உதவி வழங்கப்படுகிறது. உங்கள் துணைவர் பெற்றோர் விடுப்பை எடுத்தால், நீங்கள் 14 மாதங்களுக்குத் அந்த உதவியை பெறுவீர்கள்.

பெற்றோர் உதவி பிளஸ் எனும் உதவி வழங்கல் முறையும் உள்ளது. இதை 24 மாதங்கள் வரை பெறலாம். இந்த உதவியின் அளவு, உங்கள் ஊதியத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் வேலை இல்லாவிட்டாலும், இது உங்களுக்கு கிடைக்கும்.

குழந்தைகளுக்கான பணம்

குழந்தைகளை வளர்ப்பது மிகவும் செலவாகும். அதனால், ஜேர்மனியில் குடும்பங்களுக்கு அரசாங்கம் பணம் வழங்குகிறது. நீங்கள் குழந்தைகளுக்கான பணம் மூலம் உங்கள் குழந்தைகளை பராமரித்து, அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையும், சிறந்த எதிர்காலமும் அளிக்க முடியும்.

நீங்கள் குழந்தைகளுக்கான பணத்தை மத்திய தொழிலாளர் சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கான பணம், குறைந்தபட்சம் 18வது பிறந்த நாளுக்கு முன் பெறலாம். குறைந்த வருமானம் பெற்றவர்கள் கூட கூடுதல் தொகை பெறலாம்.

பரிசோதனை ஆய்வுகள்

உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அதனால் ஜேர்மனியில், குழந்தைகளுக்கு வழக்கமான பரிசோதனைகள் உள்ளன. இந்த பரிசோதனைகளில், குழந்தை மருத்துவர், உங்கள் குழந்தையின் வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் சரிபார்ப்பார்

உதாரணமாக, திடப்படுத்தல், எடை மற்றும் உயரத்தை சரிபார்ப்பார். அவர் அல்லது அவள், உங்கள் குழந்தை சரியாக வளர்ந்துள்ளதாக உறுதிப்படுத்துவார். ஒவ்வொரு பரிசோதனையும் மருத்துவர்கள் ஒரு புத்தகத்தில் பதிவு செய்கின்றனர். இந்த பரிசோதனைகள் இலவசம். எந்த பரிசோதனையையும் தவற விடாமல் மேற்கொள்ளுவது முக்கியம். அதுமட்டுமல்லாமல் நோய்த்தடுப்பு ஊசியையும் அவர்கள் வழங்குவார்கள்.

மாற்றுத்திறனாளிகளான குழந்தைகள்

உங்களுக்கு உடல் நிலை குறைந்த குழந்தை அல்லது நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இருந்தால், "சேர்ப்பு : மாற்றுத்திறனாளிகளுடன் வாழ்க்கை" என்ற எங்களின் உரையைப் படிக்கவும்.

சிறுவர் பராமரிப்பு

ஜேர்மனியில், உங்கள் குழந்தைகளை பராமரிக்க பல்வேறு வழிகளைக் காணலாம். "சிறுவர் பராமரிப்பு" என்ற எங்களின் தகவல் உரையைப் படிக்கவும்.

பொழுதுபோக்கு நேரம்

பொழுதுபோக்கு நேரத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் பலவற்றைச் செய்ய முடியும்: சிறிய குழந்தைகளுக்கு வெளியில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன. பெரிய குழந்தைகள் விளையாட்டு சங்கங்களுக்கும் செல்ல முடியும். கோடை பருவத்தில் திறந்த குளங்கள் உள்ளன, குளிர்காலத்தில் உள்ள உள்ளார்ந்தநீர் குளங்கள் உள்ளன. பள்ளி விடுமுறைகளில், நகரங்களில் குறைந்த செலவில் சிறுவர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. இவை பற்றி நீங்கள் நகர மண்டபத்தில் உள்ள இளவயோதினருக்கான அலுவலகங்களில் தகவல் பெற முடியும். பல சங்கங்கள் சிறுவர்களுக்கான விளையாட்டு சேவைகளை வழங்குகின்றன. மேலும் தகவலுக்கு எங்களின் "பொழுதுபோக்கு நேரம்" என்ற தகவல் உரையைப் படிக்கவும்.

ஜேர்மனியில், சிறுவர்கள் பொதுவாக தங்கள் நண்பர்களுடன் சந்திக்கின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் வீடு சென்று விளையாடுவது பொதுவானது. சில நேரங்களில், சிறுவர்கள் மற்ற சிறுவர்களை வீட்டிற்கு அழைத்து ஒரு இரவு தங்குவதற்கு அழைக்கின்றனர். பல சிறுவர்கள் தங்கள் பிறந்த நாளை ஒரு விருந்தாக கொண்டாடுகின்றனர். இந்த விருந்து பொதுவாக வீட்டில் நடைபெறும். அங்கு மகிழ்ச்சியான விளையாட்டுகள் மற்றும் கேக் இருக்கும். சில நேரங்களில், பெற்றோர் குழந்தைகளுடன் வெளியில் செல்வதை அடிப்படையாக கொண்ட விருந்துகளும் உள்ளன.

குடும்பத்தில் மோதல்கள், நெருக்கடியான சூழ்நிலைகள் மற்றும் வன்முறை

குடும்ப வாழ்க்கை எப்போதும் எளிதாக இருக்காது. குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடுமையாகவும் இருக்கலாம். மேலும், இளம் வயதில் அதாவது பூப்பெய்யும் பருவங்களில் குழந்தைகள் வளர்ந்துவரும் போது, அது எளிதான காலம் அல்ல. வேறுபட்ட பார்வைகள், பொறாமை அல்லது எதிர்பாராத வாழ்க்கை நிலைகள் குடும்பத்தில் மோதல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்க முடியும். ஆலோசனை மையங்கள், இதற்கான தீர்வுகளை காண உதவ முடியும்

உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் மிகவும் மோசமாக இருக்கின்றனவா? உடல் அல்லது பாலியல் வன்முறை உள்ளதா? வார்த்தைகள் கூட வன்முறையாக இருக்க முடியும். உடனடியாக உதவி பெறுங்கள். அவசர தொலைபேசி எண்கள் மற்றும் ஆலோசனை மையங்கள் உள்ளன. தயவு செய்து விரைவில் உதவி பெறுங்கள். பெண்களுக்கான சிறப்பு உதவித் திட்டங்களும் உள்ளன

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

எங்களை பின்தொடருங்கள்