கைபேசி மற்றும் இணையம்
நீங்கள் தொலைபேசியில் பேச விரும்புகிறீர்களா, இணையத்தில் உலாவ விரும்புகிறீர்களா, அல்லது SMS அனுப்ப விரும்புகிறீர்களா? அதற்காக நீங்கள் கைதொலைபேசி சேவையகத்தை அணுக வேண்டும். ஜேர்மனியில் பல கைதொலைபேசி சேவையகங்கள் உள்ளன. பலவகை ஒப்பந்தங்கள் அல்லது முன்பணம் செலுத்திய சிம் கார்டுகள் உங்களுக்கான விலைகளுடன் கிடைக்கின்றன. நீங்கள் அதிகமாக பேசுகிறீர்களா? நீங்கள் பயணிக்கும் போதும் இணையத்தைப்பாவிக்க விரும்புகிறீர்களா? உங்கள் தேவைக்கு ஏற்றதை தேர்ந்தெடுக்கவும்.