கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டு பயண அனுமதிச்சீட்டு

Schild an Hauswand des BAMF © Gina Bolle

ஜேர்மனிக்கு நீங்கள் செல்வதற்கு செல்லுபடியான கடவுச்சீட்டு அல்லது உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏனைய ஆவணங்கள் அவசியமாகும். கடவுச்சீட்டு ஆனது பின்னர் நீங்கள் ஒரு அலுவலகத்திற்கு செல்லும் போது தேவைப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தைச்சாராத நாடுகளிலிருந்து வருவோருக்கு வெளிநாட்டுப்பயண அனுமதிச்சீட்டு அவசியம்.
வெளிநாட்டுப்பயண அனுமதிச்சீட்டை நீங்கள் உங்கள் நாட்டிலுள்ள ஜேர்மனிய தூதரகத்தினூடாக(அல்லது உதவித்தூதரகர் அலுவலகத்தில்) பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு ஏற்கனவே வேலைக்கான ஒப்பந்தம் அல்லது உங்கள் குடும்பத்தினர் யாராவது இங்குள்ளார்களா? உங்களுக்கு தொழிற்பயிற்சி அல்லது தொழில் சம்பந்தமான அனுபவங்கள் உள்ளதா?அப்படியென்றால் இலகுவாக நீங்கள் வெளிநாட்டுப்பயண அனுமதிச்சீட்டைப்பெற்றுக்கொள்ளலாம். தகவல்களை வெளிநாட்டு அலுவல்கள் அலுவகத்தில் மற்றும் மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டிலுள்ள தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களுக்கான இணையத்தளமான „Make it in Germany“ லும் பெற்றுக்கொள்ள முடியும்.

வசிப்போரை பதிவு செய்யும் அலுவலகம் மற்றும் வதிவிட அனுமதி

ஜேர்மனியில் நீங்கள் முதலில் உங்கள் நகரத்திலுள்ள வதிவிடத்தைப்பதிவு செய்யும் அலுவலகத்தில் உங்களைப்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான காத்திருப்பு நேரம் நீண்டதாகும். இதனால் முன்கூட்டியே சந்திப்பு முன்பதிவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இணையத்தளத்தில் இதற்கான முன்பதிவை மேற்கொள்ள முடியும்.

Einwohnermeldeamt என டைப் செய்து உங்களது நகரத்தின் பெயரை இடவும். இதன் பின் நீங்கள் வதிவிடத்தைப்பதிவு செய்யும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். இங்கே உங்களுக்கான வதிவிட அனுமதிப்பத்திரத்திற்கான தலைப்புப்பெயரைப் பெறுவீர்கள்.இது ஒரு வதிவிட அனுமதி அந்தஸ்தைக்குறிக்கும் ஒரு அட்டை. இதில் நீங்கள் எவ்வளவு காலம் ஜேர்மனியில் வசிக்க அனுமதி உள்ளது மற்றும் வேலை செய்ய அனுமதி உள்ளதா என்பன குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஜேர்மனியில் முதற்படிக்கான சரிபார்ப்புப்பட்டியல்

  • உங்களால் ஜேர்மன் மொழியை சரியாகப்பேச முடியவில்லையா?
    அப்படியாயின் ஒருங்கிணைப்புப்பயிற்சிநெறி வகுப்பில் இணைந்து கற்க அனுமதி உண்டு. அல்லது கட்டாயம் நீங்கள் அதைக்கற்க வேண்டும்.

    மேலதிகத்தகவல்களை நீங்கள் ஒருங்கிணைப்புப்பயிற்சி நெறி எனும் பகுதியில் வாசிக்கலாம்
  • தொழில் தேடுதல் மற்றும் தொழில் பயிற்சி நெறி:
    தொழில் வாய்ப்பு அலுவலகம் உங்களுக்கு தொழிலொன்றைத்தேட உதவும். மற்றும் தொழில்பயிற்சி நெறியைச்சார்ந்த வகுப்புக்களை உங்களுக்கு அறியத்தரும். மேலதிகத்தகவல்களை தொழில் எனும் தலைப்பில் காணலாம். தொழில் தேடுதல் மற்றும் பல்கழைக்கழகப்படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி
  • பிள்ளைகள் மற்றும் பள்ளிக்கூடம் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.
    மேலதிகத்தகவல்களை
    பிள்ளைகள் பராமரிப்பு மற்றும் பாடசாலை அமைப்பு முறை எனும் பகுதியில் வாசிக்கலாம்
  • காப்புறுதிகள்: சில காப்புறுதிகள் மிகவும் முக்கியமானவை.
    முக்கியமானதாக உடல்நலக்காப்புறுதி,ஓய்வூதியக்காப்புறுதி, மற்றும் பராமரிப்புக் காப்புறுதி. மேலதிகத்தகவல்களை ஆரோக்கியம் மற்றும் காப்புறுதிகள் எனும் தலைப்பின் கீழ் காணலாம்.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

எங்களை பின்தொடருங்கள்