பல்கலைக்கழகப்படிப்பு

Hörsaal mit Dozent und Studierenden © Goethe-Institut

நீங்கள் ஜெர்மனியில் படிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு பல்கலைக்கழக நுழைவுத் தகுதி (HZB) தேவை. இது ஒரு ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் படிக்க உங்களை அனுமதிக்கும் பள்ளி விட்டுச் செல்லும் சான்றிதழ்.

பயண அனுமதிப்பத்திரம் (விசா), இறுதிமுடிவு மற்றும் சான்றிதழ்

ஜேர்மனியில் படிக்க விரும்புகிறீர்களா? அப்போது, உங்களுக்கு ஒரு உயர்கல்வி அணுகல் உரிமை (HZB) தேவை. இது ஒரு பள்ளி முடிவாகும். இதன் மூலம், நீங்கள் ஒரு jeeர்மன் உயர் கல்வி நிறுவனத்தில் படிக்க முடியும். நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் (EU) அல்லது ஐரோப்பிய பொருளாதார பிராந்திய (EWR) இல் இருந்து வரவில்லை என்றால், உங்களுக்கு விசா தேவை. இந்த விசாவை உங்கள் நாட்டில் உள்ள ஜேர்மன் தூதரகத்திடம் (அல்லது ஜேர்மன் கான்சுலேட்டில்) பெறுவீர்கள். மேலும், உங்களுக்கு நிதி ஆதாரமும் தேவை. நீங்கள் போதுமான பணம் வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்ட வேண்டும். நீங்கள் மருத்துவ காப்பீட்டையும் பெற வேண்டும்.

உங்கள் படிப்பு முடிந்துவிட்டதா? உயர் தகுதி வாய்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு ஜேர்மனியில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. உங்கள் சொந்த நாட்டிலிருந்து சான்றிதழ்களை மொழிபெயர்த்து சான்று பெறுங்கள். இது வேலை அனுமதிக்கு தேவையாகும். மேலதிக தகவலுக்கு, வேலை தேடல் எனும் பகுதியைப் பார்க்கவும்.

உயர் கல்வி மற்றும் பட்டப்படிப்பு

ஜேர்மனியில் பல மாநில மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அபிடூருடன் (Abitur)அல்லது மற்றொரு உயர்கல்வி அணுகல் உரிமையுடன், நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் (Uni) அல்லது தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (FH) படிக்கலாம். தொழில்நுட்ப அபிடூருடன், நீங்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு செல்லலாம் மற்றும் பல்கலைக்கழகத்தில் சில குறிப்பிட்ட பாடங்களை மட்டுமே படிக்கலாம். தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பெரும்பாலும் கூடுதல் செய்முறை அம்சங்களை உள்ளடக்கியது.

ஜேர்மனியிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பொதுவாக 3 படிப்பு முடிவுகள் உள்ளன:
  • இளங்கலைப்பட்டம் (Bachelor)
  • முதுகலைப்பட்டம் (Master)
  • மாநில தேர்வு (Staatsexamen)
ஜேர்மனியில் சுமார் 20,000 படிப்பு வகுப்புகள் உள்ளன. பல்வேறு துறைகளில் படிக்கலாம். ஆங்கிலத்தில் கூட சர்வதேச படிப்பு வகுப்புகள் உள்ளன. நீங்கள் ஒரு படிப்பு வகுப்பு அல்லது உயர் கல்வி நிறுவனத்தை தேடுகிறீர்களா? „ஜேர்மனியில் கற்றல் "( Study in Germany ) இணையதளத்தின் தகவல்கள் உங்களுக்கு உதவும்.

பல அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு அகாடெமிக் வெளிநாட்டு அலுவலகம் (AAA) உள்ளது. இதை „சர்வதேச அலுவலகம்“ எனவும் அழைக்கிறார்கள்.அழைக்கிறார்கள். இங்கே, ஜேர்மனியில் படிப்புக்கு நிபுணர்கள் ஆலோசனை தருகிறார்கள்.

மேலும், எப்போதும் இரட்டை படிப்பு வகுப்புகள் உள்ளன. இரட்டை படிப்பு வகுப்பு, உயர் கல்வி படிப்பு மற்றும் ஒரு நிறுவனத்தில் செய்முறைகல்வியையும் உள்ளடக்குகிறது. இதில், நீங்கள் நிறுவனத்திலிருந்து சம்பளம் பெறுவீர்கள்.

தேவையானவை

ஒரு இளங்கலைப்பட்டப் படிப்புக்கு, பொதுவாக பள்ளியின் முடிவுப் சான்றிதழ் தேவை. இது பொதுவான உயர் கல்வி தகுதிக்கு அல்லது தொழில்நுட்ப உயர் கல்வி தகுதிக்கு உரிய சான்றிதழாகும்.
முதுகலைப்பட்டம் என்பது மேலானபட்டப் படிப்பு ஆகும். நீங்கள் ஏற்கனவே ஒரு பட்டம் பெற்றால், முதுகலைப்பட்டப் படிப்பு மேற்கொள்ளலாம். மாநில தேர்வு குறிப்பிட்ட வகுப்புகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இதில் மருத்துவம், சட்டம், மருந்தியல், உணவு ரசாயனம் மற்றும் சில மாநிலங்களில் இக்கற்கை நெறிகள் உள்ளது. இங்கே, மாணவர்கள் மாநில தேர்வை மேற்கொள்கிறார்கள்.

வெளிநாட்டு இறுதித்தேர்வு பரீட்சை முடிவுகள் ஆனவை, அவர்களது படிப்புக்கு தேவையான அடிப்படைகளை உள்ளடக்கியதா என்பது உயர்கல்வி நிறுவனம் தீர்மானிக்கிறது. நீங்கள் வெளிநாட்டு அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுங்கள் .நீங்கள் எங்கு படிக்க வேண்டும் என்பதை இன்னும் அறியவில்லை என்றால், " uni-assist " சேவைகள் பல்கலைக்கழகங்களில், உங்கள் சான்றிதழ்களுடன் ஜேர்மனியின் ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் படிக்க முடியுமா என்பதை சரிபார்க்கும். தகவலுக்கு www.uni-assist.de மற்றும்​​​​​​​ www.anabin.de. ல் பார்க்கவும். ஆனால் இறுதித் தீர்மானம் உயர்கல்வி நிறுவனத்திற்கே இருக்கும்.

ஜேர்மனியில் (Uni மற்றும் FH) மாணவர்களுக்கு ஜேர்மன் மொயி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். ஜேர்மன் உங்கள் தாய்மொழி அல்ல என்றால், உங்கள் ஜேர்மன் அறிவைப் பற்றிழ சான்றிதழ் தேவை. பொதுவாக, " உயர்கல்வி அணுகலுக்கான ஜேர்மன் மொழி தேர்வு " (DSH) அல்லது TestDaf தேவை. மேலும், குறிப்பிட்ட மதிப்பீட்டில் மேலும் பல தேவைகள் இருக்கலாம். சில படிப்பு வகுப்புகளில் ஒரு வரம்பு எண்ணிக்கை மட்டுமே இடங்கள் உள்ளன . இதற்கான தகவலுக்கு, சம்பந்தப்பட்ட உயர் கல்வி நிறுவனத்தில் தகவலை அறிந்து கொள்ளவும்.

உங்கள் பள்ளி தேர்வின் முடிவு ஜேர்மனியில் படிக்க போதுமானது அல்ல என்றால், முதலில் ஒரு படிப்பு கல்லூரிக்கு (ஸ்டுடிஎன்கொல்லெக்) செல்ல வேண்டும். அதற்காக, ஒரு பரீட்சையை நீங்கள் செய்ய வேண்டும். உங்களுக்கு B1 நிலை உங்கள் பள்ளி தேர்வின் முடிவு ஜேர்மனியில் படிக்க போதுமானது அல்ல என்றால், முதலில் ஒரு படிப்பு கல்லூரிக்கு (Studienkolleg) செல்ல வேண்டும். அதற்காக, ஒரு பரீட்சையை நீங்கள் செய்ய வேண்டும். உங்களுக்கு B1 நிலை ஜேர்மன் மொழி தேவை . ஒரு படிப்பு கல்லூரியின் முடிவில், " Feststellungsprüfung " எனப்படும் தேர்வு நடாத்தப்படும். ஒரு படிப்பு கல்லூரி பொதுவாக 2 பருவமுறையைக் கொண்டது. சில சமயம் அது குறைவாக இருக்கலாம். வகுப்புகள் இலவசமாக இருக்கும். ஆனால், நீங்கள் ஒரு பருவமுறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

பொதுவாக, படிப்பு வகுப்புகளுக்கான விண்ணப்ப நேரங்கள் உள்ளன. ஆகவே, ஜேர்மனியில் படிக்க விரும்பினால், முன்னதாக தகவல்களைப் பெறுவது முக்கியம்.

படிப்பு நடைமுறை மற்றும் காலம்

ஜேர்மனியின் உயர் கல்வி நிறுவனங்களில் ஆண்டில் பொதுவாக 2 அரையாண்டுப்பருவங்கள் (Semester) உள்ளன: குளிர்கால மற்றும் கோடை கால பருவங்கள். ஒரு அரையாண்டுப்பருவம் ஆறு மாத காலமாக இருக்கின்றது. இதில், சுமார் 2.5 மாதங்கள் இதற்கான விடுமுறை காலமாகும். கோடை பருவ விடுமுறை பொதுவாக நீளமாக இருக்கும். விடுமுறைகளில், பாடங்கள் அல்லது கருத்தரங்குகள் நடைபெறாது. அதன்பின் மாணவர்கள் பெரும்பாலும் தேர்வுகளை எழுதுவார்கள். அவர்கள் வீட்டுப்பாடங்களை எழுதுவதோடு, ஒரு பயிற்சியில் (Praktikum) பங்கேற்கவும் முடியும். பல வகுப்புகள் குளிர்கால பருவத்தில் மட்டுமே தொடங்குகின்றன

ஒரு பட்டப் படிப்பு நடைபெறும் காலம் காலம் வித்தியாசமாக இருக்கும். இது நீங்கள் எந்த பட்டப் படிப்பில் உள்ளீர்கள் மற்றும் நீங்கள் தேர்வுகளை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதனைப் பொறுத்துள்ளது. இளங்கலைப்பட்டம் முடிக்க, பொதுவாக 6 முதல் 8 பருவங்கள் தேவை. மேலும் 2 முதல் 4 பருவங்கள், உங்கள் முதுகலைப்பட்டப்படிப்புக்கு தேவை. ஒரு படிப்பின் முடிவில், நீங்கள் ஒரு முடிவு அறிக்கையை எழுத வேண்டும். சில நேரங்களில், நீங்கள் ஒரு செய்முறைப் பகுதியையும் செய்ய வேண்டும். மாநில தேர்விற்கு தேவைப்படும் காலம், படிப்பு வகுப்பின் அடிப்படையில் இருக்கும்.

ஒரு படிப்பில் வெவ்வேறு உள்ளடக்கங்கள் உள்ளன. பொதுவாக, பாடங்கள் மற்றும் கருத்தரங்குகள் உள்ளன. பாடத்தில், பொதுவாக, அதிகமான மாணவர்கள் ஒரு பெரிய அறையில் அமர்ந்து ஆசிரியர் ஒரு தலைப்பில் ஒரு விஷயத்தை கூறும்போது மாணவர்கள் கேட்டு எழுதுவார்கள். கருத்தரங்குகளில், பொதுவாக, குறைந்த அளவு மாணவர்கள் இருப்பார்கள் மற்றும் இது பாடத்திற்கு ஊடாடகவே இருக்கும்.

செலவுகள்

படிப்பிற்கான கட்டணங்கள் மாநிலத்திற்கேற்ப மாறுபடும். அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் மாதிரி படிப்புகள் இலவசமாக உள்ளன. ஒவ்வொரு பருவத்திற்கும், மாணவர்கள் பொதுவாக ஒரு பருவக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இது நிர்வாக, மாணவர்களுக்கான சேவைகள் மற்றும் பருவ டிக்கெட்டுக்கான செலவுகளை உள்ளடக்கியது. பருவ டிக்கெட்டின் மூலம், மாணவர்கள் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம். தனியார் உயர் கல்வி நிறுவனங்களில், கட்டணம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக இருக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்களை பின்தொடருங்கள்