திருமணம்

Hände mit Ringen © Goethe-Institut

பல நாடுகளில், நீங்கள் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்வதைக் காண்கிறீர்கள். இது ஒரு அரசு திருமணம் ஆகும். ஜேர்மனியிலும் இதுபோலவே. இதுவே திருமணத்தை சட்டப்படி செல்லுபடியாக்குகிறது. அதன் பிறகு நீங்கள் தேவையெனில், சமயதுறைசார் திருமணமும் செய்யலாம். திருமணம் செய்ய நபர்கள் இருவரும் குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

Audio-Player: Artikel anhören

Artikel anhören

Heirat

எல்லோருக்கும் திருமணம்

ஜேர்மனியில், பல ஜோடிகள் திருமணமாகாமல் ஒன்றாக வாழ்கின்றனர். இது குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்குள் கூட பொதுவாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி முடிவெடுக்க முடியும்.

2017 அக்டோபர் 1ம் தேதி முதல், ஜேர்மனியில் ஒரே பாலின ஜோடிகள், அதாவது ஒரு ஆண் மற்றும் ஆண் அல்லது ஒரு பெண் மற்றும் பெண் திருமணம் செய்ய முடியும். அவர்களுக்குள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் ஒன்றுதான். இதன் பொருள்: அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுத்து கொள்ள முடியும். அவர்கள் தங்களது சக ஆண் அல்லது பேண் துணைவரின் பெயரைப்பயன்படுத்த முடியும். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு அளிக்க வேண்டும்.

ஆவணங்கள்

நீங்கள் ஜேர்மனியில் திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். சில ஆவணங்களை தேவையானால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உங்கள் அடையாளப் பத்திரம் அல்லது கடவுச்சீட்டு, பிறந்த சான்றிதழ், உங்கள் முகவரியைக் குறிக்கும் பதிவு சான்றிதழ் மற்றும் திருமணத்திற்கான தகுதி சான்றிதழ். உங்களுக்கு குழந்தைகள் உள்ளதா? அப்படியாயின் நீங்கள் அவர்களின் ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும். மேலும் எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பதைக் கேளுங்கள்.

நீங்கள் உங்கள் சொந்த நாட்டிலிருந்து ஆவணங்களை கொண்டுவரும் போது, அவற்றை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும். ஒரு பதிவு சான்று அலுவலர் மொழிபெயர்ப்புகளை சரியானவை என்று அத்தாட்சிப்படுத்த வேண்டும்.

திருமணம் செய்த பிறகு, பதிவு அலுவலகத்தில் புதிய ஆவணம் ஒன்று பெறுவீர்கள்: திருமண சான்றிதழ் அல்லது திருமண சான்று. நீங்கள் விரும்பினால், உங்கள் குடும்பத்தின் விவரங்களுடன் ஒரு குடும்ப புத்தகம் ஒன்றைப்பெறலாம்.

நீங்கள் உங்கள் சொந்த நாட்டில் ஏற்கனவே திருமணம் செய்துள்ளீர்களா? நீங்கள் உங்கள் நாட்டின் திருமண சான்றிதழை பதிவு அலுவலகத்தில் அங்கீகரப்படுத்த முடியும். உங்கள் நகரம் அல்லது மாவட்ட பதிவு அலுவலகத்தை கேளுங்கள்.

திருமண விழா

பெரும்பாலானவர்கள் அவர்களது திருமணத்திற்கு ஒரு பெரிய விழாவை நடத்துகின்றனர். திருமணத்திற்கு பல விருந்தினர்கள் அழைக்கப்படுகின்றனர். பொதுவாக பெற்றோர்கள், சகோதரர்கள், தாதா, பாட்டி,மாமா, மாமியார், மச்சான், மச்சாள்மார்,உறவினர்கள், நண்பர்கள், தொழிலாளர்கள் இவர்கள் அனைவரும் திருமண விழாவுக்கு வருவார்கள். ஜேர்மனியில் பெரும்பாலும் 100 பேர் வரை திருமண விழாவுக்கு வருகிறார்கள். அதாவது சில பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஜேர்மனியில் உள்ள திருமண விழாக்கள் கொஞ்சம் சிறியதாக இருக்கும்.

உணவுப்பொருட்கள், இசை மற்றும் நடனம் உள்ளன. மணமகள் மற்றும் மணமகன் சேர்ந்து ஒரு நடனமாடுவார்கள், மற்றவர்களெல்லாம் இதைப்பார்த்து ரசிப்பார்கள்.அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு திருமண கேக்கை வெட்டுவார்கள். சில நேரங்களில், மணமக்களுக்கான விளையாட்டுகள் இருக்கலாம். பெண் பெரும்பாலும் வெள்ளை நிற திருமண உடை அணிவாள். பல ஜோடிகள் திருமண மோதிரத்தை அணிவார்கள். விருந்தினர்கள் பரிசுகளை கொண்டு வருவார்கள். பெரும்பாலும் பணம் பரிசாக கொடுக்கப்படும். விருந்தினர்கள் திருமண ஜோடியிடம் முன்பே, அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று கேட்க முடியும்.

குடும்ப இணைவு

உங்கள் கணவரோ அல்லது மனைவியோ இன்னும் உங்கள் சொந்த நாட்டிலுள்ளவரா? நீங்கள் உங்கள் குடும்பத்தை ஜேர்மனிக்கு அழைக்க முடியும். அதற்காக உங்களுக்கு ஒரு வதிவுரிமை அனுமதி தேவைப்படுகிறது. இது மட்டும் கணவர் மற்றும் மனைவியர் மற்றும் 18 வயதிற்கும் குறைவான பிள்ளைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனை குடும்ப இணைப்பு அல்லது கணவர்/மனைவி இணைப்பு என அழைக்கின்றனர். குறிப்பிட்ட சர்வதேச திறமை வாய்ந்த தொழிலாளர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் மாமனார் மாமியார்களை ஜேர்மனிக்கு அழைக்க முடியும். இது, 2024 மார்ச் 1க்கு பின் நீங்கள் வதிவுரிமை அனுமதி பெற்றிருந்தால் இது பொருந்தும்.

இதற்கான சில குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன. உங்கள் குடும்பத்தை பராமரிக்க வசதி வாய்ப்புக்கள் இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு உங்கள் வீட்டில் இடம் இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு தேவை. உங்கள் கணவரோ அல்லது மனைவியோ அடிப்படை ஜேர்மன் மொழி அறிவு கொண்டிருக்க வேண்டும். அதற்காக, நீங்கள் ஒரு மொழி சான்றிதழை பெற வேண்டும். அந்த சான்றிதழில், அவர் அல்லது அவள் குறைந்தபட்சம் ஆ1 நிலை ஜேர்மன் மொழி அறிவு கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 16 வயதிற்கும் குறைவான பிள்ளைகளுக்கான ஜேர்மன் மொழி பரீட்சை தேவைப்படாது.

பிரிவு மற்றும் விவாகரத்து

உங்கள் திருமண வாழ்வில் இனி நன்றாக இருக்காது? உங்களுக்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்படுகிறதா? முதலில், ஒரு திருமண ஆலோசனை அல்லது துணைவர்களுக்கான சிகிச்சை செய்ய முயற்சிக்கவும். இது சில சமயங்களில் உதவக்கூடும்.

ஆனால் சில நேரங்களில் பிரிவு அல்லது விவாகரத்து செய்ய காரணங்கள் இருக்கலாம். விவாகரத்து எளிதல்ல. முதலில், நீங்கள் ஒரு வருடம் பிரிந்து வாழ வேண்டும். ஆலோசனை பெறுங்கள். ஆலோசனை மையங்கள் சட்ட சார்ந்த கேள்விகள் அல்லது பிள்ளைகள் குறித்த கேள்விகளில் உதவி செய்யலாம், உதாரணமாக, பிள்ளைகள் எப்போது யாருடன் வாழ வேண்டும் அல்லது யார் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை குறித்த கேள்விகள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்களை பின்தொடருங்கள்