வாழுதல்

Mehrfamilienhaus © Goethe-Institut/ Simone Schirmer

ஜேர்மனியில் ஒரு வீட்டைத் தேடுகிறீர்களா? சில பகுதிகளில் ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பது எளிது. மற்ற பகுதிகளில், ஒரு வீட்டைப் பெறுவது மிகவும் கடினம். தேடுவதை விரைவில் தொடங்குங்கள், பொருத்தமான வீட்டு விளம்பரத்தைக் கண்டால் வீட்டு உரிமையாளரை விரைவில் தொடர்பு கொள்ளுங்கள்.

வீடு தேடுதல்

இணையத்தில் வீடு தேடுவதற்கான சில தளங்கள் உள்ளன, எடுத்துக்காட்டாக: நீங்கள் ஒரு வீட்டை பகிர்பவர்களிடம் (சுருக்கமாக WG) ஒரு அறையை வாடகைக்கு எடுக்கலாம். ஒரு WG இல், நீங்கள் மற்ற நபர்களுடன் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்கிறீர்கள்.

WG- அறைகளை நீங்கள் wg-gesucht.de. இணையதளத்தில் காணலாம். இடைக்கால வாடகைக்கு வீடுகளும் உள்ளன. இந்த வீடுகளை நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வாடகைக்கு எடுக்க முடியும்.

பல செய்தித்தாள்களிலும் வீட்டு விளம்பரங்கள் உள்ளன, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில். வீட்டு விளம்பரங்களை செய்தித்தாளின் இணையதளங்களிலும் காணலாம். மேலும், உங்கள் நகரம் அல்லது நகராட்சியின் வீட்டு அலுவலகத்தில் ஒரு வீட்டைக் கேட்கலாம். ஒரு வீட்டு தரகரும் தேடலில் உதவலாம்: இந்த நபர் மூலம் நீங்கள் ஒரு வீட்டை எடுத்தால் நீங்கள் பணம் செலுத்த வேண்டும். பொதுவாக ஒரு முகவர் 2 - 3 மாத வாடகையின் தொகையை கமிஷனாகப் பெறுகிறார்.

வாடகை மற்றும் முற்பணம்

விளம்பரங்களில் பெரும்பாலும் நீங்கள் வீட்டிற்கு எவ்வளவு வாடகை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அது பெரும்பாலும் குளிர் வாடகை மட்டுமே. அதற்கு மேல் நீங்கள் கூடுதல் செலவுகளையும் செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் தண்ணீர், படிக்கட்டு சுத்தம் மற்றும் குப்பை ஆகியவற்றிற்கு பணம் செலுத்த வேண்டும். வெப்பமாக்கல் மற்றும் மின்சாரம் ஆகியவையும் கூடுதல் செலவுகளின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அது மாறுபடும். கூடுதல் செலவுகளில் என்ன அடங்கும் மற்றும் நீங்கள் கூடுதலாக என்ன செலுத்த வேண்டும் என்பதை வீட்டு உரிமையாளரிடம் கேளுங்கள்.

குளிர் வாடகை மற்றும் கூடுதல் செலவுகள் இரண்டும் சேர்ந்து சூடான வாடகை என்று அழைக்கப்படுகிறது. முழு சூடான வாடகையையும் மாதத்தின் தொடக்கத்தில் எப்போதும் உங்கள் வீட்டு உரிமையாளருக்கு செலுத்த வேண்டும்.

பொதுவாக வீடுகள் தளபாடங்கள் அற்று இருக்கும்.. ஆனால் பெரும்பாலும் ஒரு சமையலறை இருக்கும். வீட்டில் தங்கியிருக்கும் மற்றும் முந்தைய வாடகைதாரரிடமிருந்து வந்த பொருட்கள், எடுத்துக்காட்டாக ஒரு குளிர்சாதனப்பெட்டி, பொதுவாக நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இதை மாற்று பணம் என்று அழைக்கிறார்கள்.

பெரும்பாலும் வீட்டு உரிமையாளர் நீங்கள் ஒரு வைப்புத்தொகையை செலுத்த விரும்புவார். இது அதிகபட்சமாக 3 குளிர் வாடகைகளாக இருக்கலாம். வெளியேறும்போது, வைப்புத்தொகை உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். ஒரு வீட்டிற்கான வாடகை மிக அதிகமாக உள்ளதா என்பதைப் பார்க்க விரும்பினால், வாடகை கண்ணாடியைப் („Mietspiegel“ ) பார்க்கலாம். அங்கு ஒவ்வொரு நகரத்திற்கும் சராசரி வாடகை விலைகளைக் காணலாம். இணையத்தில் "வாடகை கண்ணாடி" மற்றும் உங்கள் நகரத்தின் பெயரை உள்ளிடவும்.

ஆண்டின் தொடக்கத்தில், எவ்வளவு தண்ணீர், மின்சாரம் அல்லது எரிவாயு தேவைப்படும் என்பது தெரியாது. எனவே, ஒவ்வொரு மாதமும் ஒரு முன்பணம் செலுத்தப்படுகிறது. ஆண்டின் இறுதியில், பணம் திரும்பப் பெறப்படும் அல்லது சற்று அதிகமாக பணம் செலுத்த வேண்டும்.

வாடகை ஒப்பந்தம்

வாடகை மற்றும் வைப்புத்தொகை பற்றிய அனைத்து தகவல்களும் வாடகை ஒப்பந்தத்தில் உள்ளன. வெளியேறும்போது நீங்கள் வீட்டை புதுப்பிக்க வேண்டுமா என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்குள் நுழையும்போது, நீங்கள் ஒரு ஒப்படைப்பு நெறிமுறையில் கையெழுத்திட வேண்டும். ஒப்படைப்பு நெறிமுறையில், வீட்டில் ஏதாவது உடைந்துள்ளதா என்பது போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்போது நீங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர் அதை நீங்கள் உடைக்கவில்லை என்பதை உறுதியாக அறிவீர்கள். கையெழுத்திடுவதற்கு முன் வாடகை ஒப்பந்தத்தையும் ஒப்படைப்பு நெறிமுறையையும் கவனமாகப் படியுங்கள்.

வெளியேற விரும்பினால், பொதுவாக 3 மாதங்களுக்கு முன்னதாக வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதை காலக்கெடு என்று அழைக்கிறோம். இரட்டை வாடகை செலுத்தாமல் இருக்க எப்போதும் காலக்கெடுவை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு, மாத இறுதியில் வீட்டு உரிமையாளருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும்.

வீட்டு விதிமுறைகள்

உங்கள் அண்டை வீட்டாருடன் மோதலைத் தவிர்க்க விரும்புகிறீர்களா? சில விதிகளைக் கவனியுங்கள்: பொதுவாக இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை அமைதி நேரம் மற்றும் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை மதிய அமைதி நேரம். எனவே அந்த நேரங்களில் அதிக சத்தம் போடக்கூடாது. ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் முழு நாளும் அமைதி நேரம்.

ஜேர்மனியில் காகிதம் மற்றும் அட்டை, பழங்கள் மற்றும் காய்கறி கழிவுகள் மற்றும் பிற குப்பைகளுக்கு என வெவ்வேறு குப்பைத் தொட்டிகள் உள்ளன. பெரும்பாலும் வீட்டின் முன் குப்பைத் தொட்டிகள் இருக்கும். இங்கு குப்பைகளை வீசலாம். கண்ணாடி அல்லது மின் சாதனங்களை சிறப்பு சேகரிப்பு மையங்கள் அல்லது கொள்கலன்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பிளாஸ்டிக், டப்பாக்கள் மற்றும் பேக்கேஜிங் குப்பைகளை மஞ்சள் பை அல்லது மஞ்சள் தொட்டியில் வீசவும். நகரத்தில், பிளாஸ்டிக் மற்றும் பேக்கேஜிங் குப்பைகளை பெரும்பாலும் அருகிலுள்ள மதிப்புமிக்க பொருள் தொட்டியில் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் நகரம் அல்லது சமூக மன்றத்திடம் விசாரிக்கவும்.

மற்ற அனைத்து விதிகளும் உங்கள் வீட்டு விதிமுறைகளில் காணலாம். எடுத்துக்காட்டாக: வீட்டில் நாய் அல்லது பூனை வைத்திருக்கலாமா? அல்லது: வீட்டின் முன் உள்ள தாழ்வாரம் அல்லது நடைபாதையை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டுமா?

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

எங்களை பின்தொடருங்கள்