ஆரோக்கியம்

Schild vor einem Krankenhaus © Goethe-Institut/ Gina Bolle

நீங்கள் நோய்வாய்ப்பட்டதாக உணருகிறீர்களா? உதாரணமாக, உங்களுக்கு காய்ச்சல் அல்லது தலைவலி இருக்கிறதா? சில சிறிய நோய்களுக்கு நீங்கள் மருந்துகளை மருந்து கடையில் வாங்க முடியும். ஜேர்மனியில் பல மருந்து கடைகள் உள்ளன. மருந்தாளர்கள் உங்களுக்கு உதவி ச்ய்வார்கள் அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து, சரியான மருந்தை கண்டறிய உதவுவார்கள்.

Audio-Player: Artikel anhören

Artikel anhören

Gesundheit

மருந்து கடைகள்

பல நோய்களுக்கு, நீங்கள் மருந்து பெற வைத்தியரின் சிகிச்சை பரிந்துரை சீட்டைப் பெற வேண்டும். இந்த சீட்டில் ஆவணத்தில் நீங்கள் எதைப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும். அந்த பரிந்துரையை ஒரு மருத்துவர் பெற்று, அந்த மருந்துகளை மருந்து கடையில் வாங்க முடியும். நீங்கள் ஒரு பகுதியை மட்டுமே செலுத்துவீர்கள், மீதமுள்ள தொகையை உங்கள் மருத்துவ காப்பீடு செலுத்தும்.

மருந்து கடைகள் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கின்றன. சனிக்கிழமைகளில் சில மருந்து கடைகள் மதியம் 1:00 மணி வரை திறந்திருக்கும். நகரங்களில், சில மருந்து கடைகள் மாலை 8 மணி வரை திறக்கின்றன. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரவு நேரங்களில் அவசரகால சேவைகளும் உள்ளன.

மருத்துவ காப்பீடு

ஜேர்மனியில் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவ காப்பீடு கட்டாயமாக இருக்கின்றது. இந்த விஷயத்தைப் பற்றி மேலும் படிக்க நீங்கள் எங்கள் தகவல் பக்கத்தில் உள்ள "காப்பீடுகள்" எனும் பகுதியைப்பார்க்களாம்.

மருத்துவர் சந்திப்பு

நீங்கள் நோய்வாய்ப்பட்டதாக உணர்கிறீர்களா அல்லது மருத்துவ உதவி தேவைபடுகிறதா? அப்போது நீங்கள் பொதுவாக ஒரு மருத்துவரை சந்தித்தல் சிறந்தது. அவர் அனைத்து குறைபாடுகள் மற்றும் நோய்கள் பற்றிய முதன்மை கேள்விகளுக்கு பதிலளிப்பார்.அவர்களை குடும்ப வைத்தியர் என்று அழைப்பார்கள் நீங்கள் வைத்தியரிடம் போவது முக்கியம், ஏனென்றால் அவர் ந்--ங்கள் மீண்டும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி செய்ய முடியும். அவர்களால் உதவி செய்ய முடியாது என்றால், அவர்கள் உங்களை மருத்துவர் நிபுணரிடம் அனுப்புவார்கள்.

உங்கள் குழந்தை நோய்வாய்ப்பட்டுள்ளதா ? அப்படியாயின் நீங்கள் குழந்தைகள் மருத்துவரை சந்திக்க வேண்டும். மருத்துவரிடம் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே செல்ல முடியும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரவு நேரங்களில் அவசர மருத்துவசேவை உள்ளது.

ஒரு சந்திப்புக்கு நீங்கள் மருத்துவ நிலையத்தை அழைக்கலாம். அல்லது நீங்கள் இணைய சேவையின் மூலம் அன்றாட சந்திப்பை செய்துகொள்ள முடியும். இது பெரும்பாலான மருத்துவர்களுக்கு எளிதானதாகவும் வசதியானதாகவும் இருக்கும். நீங்கள் மருத்துவ நிலையத்தின் வலைத்தளத்திற்கு சென்று, ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து, உறுதிப்படுத்தல் பெறுவீர்கள். அந்த உறுதிப்படுத்தலில் நீங்கள் எந்த நேரத்தில் மருத்துவரை சந்திக்க முடியும் என்பதையும் பார்க்க முடியும். பல நேரங்களில், நீங்கள் அந்த சந்திப்புக்குக் குறுகிய நேரத்தில் மின்னஞ்சல் அல்லது SMS மூலம் ஒரு நினைவூட்டலைப் பெறுவீர்கள்.

மருத்துவரை சந்திக்கும்போது, நீங்கள் உங்கள் மருத்துவ காப்பீட்டின் அட்டை அல்லது சுகாதாரக் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். முதல் சந்திப்பில், உங்கள் தனிப்பட்ட விவரங்களுடன் கூடிய ஒரு கேள்வி பட்டியலை நிரப்ப வேண்டும். அதில், உங்கள் பெயர், முகவரி மற்றும் பிற விவரங்களை எழுத வேண்டும். சில நேரங்களில், உங்கள் உடல்நிலை என்ன, நீங்கள் இறுதியில் ஏதாவது மருந்துகள் எடுத்துள்ளீர்களா? போன்ற கேள்விகளைக்கேட்பார்கள்.

பதிவேற்றத்தின் பின்பு, நீங்கள் காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டும். பின்னர் உங்களை அழைப்பார்கள். இது சில நேரங்களில் சில நிமிடங்களில் முடியும், சில சமயம் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் ஆகலாம்.

சிகிச்சை அறையில், மருத்துவர் உங்களிடம் கேள்விகள் கேட்பார். " வலி ஏதும் உண்டா? எவ்வளவு காலமாக இது உண்டாகிறது? இந்த வலி முன்பும் உள்ளதா?" உங்கள் குறைகள் குறித்து முழுமையாக விளக்க வேண்டும். உரையாடலின் பிறகு, நீங்கள் பரிசோதிக்கப்படுவீர்கள். அதன் பிறகு, உங்களின் நோயை கண்டறிந்து தற்கான அறிவிப்பு வழங்கப்படும்.மருத்துவர் மேலும் என்ன செய்யவேண்டும் என்பதையும் கூறுவார்கள். பெரும்பாலும், அவர்கள் உங்களுக்கு மருந்துகளுக்கு ஒரு பரிந்துரை வழங்குவார்கள். இந்த மருந்துகளை நீங்கள் மருந்து கடையில் வாங்க முடியும். சில நேரங்களில், புதிய பரிசோதனைக்கான ஒரு புதிய தேதி உங்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் ஒரு சட்டபூர்வமான மருத்துவ காப்பீட்டில் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், மருத்துவருக்கு சென்றதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. தனியார் சேவைகள் எனின் நீங்கள் தனியே செலுத்த வேண்டும். தனியார் காப்பீடு கொண்டவர்கள் ஒரு பற்றுச்சீட்டை பெறுவார்கள். அவர்கள் மருத்துவரின் கட்டணத்தை தாங்கள் செலுத்தி, பின்னர் அந்த பணத்தை மருத்துவ காப்பீட்டிலிருந்து பெறுவார்கள்.

நோய்க்குறிப்பு

நீங்கள் நோய்வாய்ப்பட்டதாக உணர்கிறீர்களா? நீங்கள் உடனடியாக உங்கள் வேலைத்தளத்தை தொடர்புகொண்டு உங்கள் தொழில் வழங்குனருக்கு நோய்வாய்ப்பட்டதாகத் தகவல் அளிக்க வேண்டும். நீங்கள் தொலைபேசியில் அழைத்து, நோய் கிட்டத்தட்ட எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் கூற வேண்டும்.

நீங்கள் ஒரு மருத்துவரை சந்தித்தீர்களா? நீங்கள் அந்த நோயினால் வேலை செய்ய முடியாதிருக்கின்றீர்களா? அப்போது, உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பருத்துவக் குறிப்புக்கு எழுதுவார். அதை மருத்துவச்சான்றிதழ் என்றும் அழைக்கின்றனர். அதில் நீங்கள் வேலை செய்ய முடியாது என்றும், நீங்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதில், நீங்கள் எவ்வளவு காலம் வீட்டில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுவார்கள். இதற்காக நீங்கள் எந்த காகிதமும் பெறமாட்டீர்கள்.மருத்துவர் நேரடியாக தகவலை உங்கள் மருத்துவ காப்பீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.உங்கள் தொழில் வழங்குனர் இதை நேரடியாக இணையத்தில் பார்க்கலாம்

சில தொழில் வழங்குனர்கள் முதல் நாளிலேயே நோய்குறிப்பைக்கேட்பார்கள். பலர் மூன்றாவது நாளிலிருந்து தான் அதைப் பொருட்படுத்துவர். நீங்கள் ஒருனோய்குறிப்பைக் பெறுவதற்காகா ஒரு மருத்துவமனையை நாடலாம். சாதாரண நோய்களுக்கு இது ஐந்து நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். நீங்கள் அதிக காலம் நோய்வாய்ப்பட்டிருந்தால், மருத்துவரை சந்திக்க வேண்டும்.

மருத்துவ நிபுணர்கள்

பல்வேறு வகையான மருத்துவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தனிப்பட்ட தொழில்களைக் கொண்டவர்கள். அதனால், அவர்கள் மருத்துவ நிபுணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். உதாரணமாக, எலும்பியல் நிபுணர்கள் எலும்புகள் மற்றும் மூட்டு தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளையும் கவனிப்பார்கள். உதாரணமாக, நீங்கள் உங்கள் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பெண்களுக்கான மருத்துவ நிபுணர்களில் பெண்நோய் மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனைகளைக் கவனிப்பார்கள்.
இதைத்தவிர மூக்கு, காது, தொண்டை நிபுணர்களும் மற்றும் பல்வேறுபட்ட வைத்திய நிபுணர்களும் உள்ளனர்.

பொதுவாக, மருத்துவர் உங்களை ஒரு மருத்துவ நிபுணரிடம் அனுப்புவார்கள். அதன் பின் நீங்கள் ஒரு மருத்துவ பரிசோதனை பெறுபேற்றைப்பெறுவீர்கள். உங்கள் குடும்ப மருத்துவர்உன்களுடையா நோயைப்பற்றி அறிந்து கொள்வார்கள்.

நீங்கள் எந்த மருத்துவநிபுணரை அணுக வேண்டும் என்று தெரிந்தால் நேரடியாக அந்த இடத்திற்கு செல்லலாம். உங்களுக்கு ஒரு பரிந்துரை பெற வேண்டும் என்று அவசியமில்லை. பல் மருத்துவருக்கு நீங்கள் பரிந்துரையைப் பெற தேவையில்லை.

உள ஆரோக்கியம்

உங்களுக்கு உடல் நலம் சரியில்லையா? நீங்கள் சோர்வாக இருக்கின்றீர்களா? உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. ஆனால் உடல் மட்டும் நோய்க்குள்ளாகாது, மனச்சோர்வு அல்லது மனநலம் பற்றிய பிரச்சனைகள் கூட ஏற்படலாம். இது, உங்கள் எண்ணங்களுடன் மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடையவை. பிரச்சனைகள், மன அழுத்தம், பயம் அல்லது துன்பம் நம்மை நோய்க்குள்ளாக்கலாம். உங்கள் மனநலத்தை கவனிக்கவும். உங்கள் உடலை கவனமாக பராமரிக்கவும். நீங்கள் துக்கம், அழுத்தம் அல்லது பயம் போன்ற உணர்வுகளை அனுபவித்தால், அதற்கான உதவி பெறுங்கள்.

மருத்துவ பரிசோதனை

பரிசோதனைகள் மூலம் கடுமையான நோய்களை முதலில் கண்டறிந்து, விரைவாக குணமாக்க முடியும். சில பரிசோதனைகளுக்கு மருத்துவ காப்பீடு செலுத்தும். சிலவற்றிற்கு நீங்கள் தானாக செலுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கும் பரிசோதனைகள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானவை. தொற்றுநோய்களான சின்னமுத்து, குக்கல் மற்றும் அம்மை போன்றவை. போன்றவை . இவைக்கான தடுப்பூசி உள்ளது. மேலதிக தகவல்களுக்கு "பிள்ளைகளுடன் வாழ்க்கை" எனும் பகுதியைப்பாருங்கள்.

35 வயதுக்குப் பிறகு, நரம்பு மற்றும் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றை முன்னிறுத்தும் பரிசோதனைகள் உள்ளன. பெண்களுக்கு மார்பு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு வழக்கமான பரிசோதனைகள் வழங்கப்படுகின்றன.

பாலினம், வயது அல்லது குடும்பத்தில் இருக்கும் நோய்களுக்கு ஏற்ப பல்வேறு பரிசோதனைகள் உள்ளன. பெரியவர்கள் கூட தடுப்பு மருந்துகள் முக்கியமானவை. உங்கள் மருத்துவருடன் பேசுங்கள்.

அவசரநிலை அழைப்புகளுக்கான முக்கிய தொலைபேசி எண்கள்

ஜேர்மனியில், அனைத்து மக்களும் போலீசின் அவசரநிலை எண் (110) மற்றும் தீயணைப்புவா/சிகிச்சை சேவை (112) ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். உதவி மற்றும் ஆலோசனை தேவைப்பட்டால், பிற தொலைபேசி எண்களும் உள்ளன. "அவசரத்தில் என்ன செய்வது?" என்ற எங்கள் பகுதியில் மேலும் காணலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்களை பின்தொடருங்கள்