பொருட்களை வாங்குதல்

Fahrrad mit Körben und Einkaufstaschen © Goethe-Institut

சகல நகரங்களிலும்;, ஆனால் ஒரு சில கிராமங்களிலும் பெரிய பல்பொருள் அங்காடிகள் காணப்படுகின்றன. அங்கே நாளாந்த தேவைக்கான அநேகமான பொருட்களை நீங்கள் வாங்கலாம். பாண் , இறைச்சி, பழவகை மற்றும் மரக்கறி, பால் மற்றும் யோகட்,சொக்கலேட், சுத்திகரிக்கும் பொருட்கள் மற்றும் கடதாசி வகைகள். ஜேர்மனியில் களஞ்சியங்கள் பெரும்பாலும் மாறுபட்ட நேரங்களில் திறக்கப்படுகின்றன. இப்பல்பொருள் அங்காடிகள் சாதாரணமாக காலை 7.00 மணியிலிருந்து ஆகக் குறைந்தது இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.

நாளாந்தம் காணப்படும் களஞ்சிங்கள் மற்றும் கடைகள்

உங்களுக்கு புதிய பலசரக்கு மற்றும் மரக்கறி, பழவகைகளை வாங்க வேண்டுமா? அநேகமான இடங்களில் கிழமையில் ஒன்று அல்லது இரண்டு தடவை சந்தை காணப்படும். அநேகமாக சனிக்கிழமைகளில் இது காணப்படும். இங்கே புதியதான பழவகை, மரக்கறி மற்றும் உள்ளூரில் பிரசித்தி பெற்றவைகளை பெற்றுக் கொள்ள முடியும். புதியதான இறைச்சி மற்றும் சோசேயஸ் வகைகளை இறைச்சிக்கடைகளில் (தெற்கு ஜேர்மனியில் இவை Metzgereien என அழைக்கப்படும்) பெற்றுக்கொள்ளலாம். புதிய பாண்வகைகளை வெதுப்பகங்களில் பெற்றுக் வாங்கலாம்.

சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள வெதுப்பகங்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் பிற சிறிய கடைகள் பெரும்பாலும் முன்னதாகவே மூடப்படும் அல்லது ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் மட்டுமே திறந்திருக்கும். வாராந்திர சந்தைகள் பொதுவாக அதிகாலை முதல் பிற்பகல் வரை நீடிக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். வெதுப்பகங்கள், ரயில் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மட்டுமே ஞாயிறுகள் மற்றும் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும்

விநியோக சேவை

அருகில் சூப்பர் மார்க்கெட் இல்லையா? அல்லது வெளியே சென்று பொருட்கள் வாங்க விரும்பவில்லையா? நீங்கள் உள்ளூர் விநியோகசேவையை சேவையைப் பயன்படுத்தலாம். யாராவது உங்களுக்கு வீட்டிற்கு உணவுப் பொருட்களைக் கொண்டு வருவார்கள். இணையத்தில் "உணவுப் பொருட்களுக்கான விநியோகசேவை" மற்றும் உங்கள் நகரத்தைத் தேடுங்கள். பொதுவாக, நீங்கள் இணையத்தில் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். பல சூப்பர் மார்க்கெட்டுகளும் விநியோகசேவையை வழங்குகின்றன. இருப்பினும், இந்த சேவை கடையில் பொருட்களை வாங்குவதை விட அதிகமாக செலவாகும். சமைத்த உணவுகளை வழங்கும் விநியோகசேவைகளும் உள்ளன. இங்கே நீங்கள் அழைக்கலாம் அல்லது இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

மறுசுழற்சி பணம் / மீழப்பெறும் பணம்

ஜேர்மனியில், அனைத்து குடிநீர் கேன்கள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பல கண்ணாடி போத்தல்களுக்கு " மீழப்பெறும் பணம் " உள்ளது. நீங்கள் கேன் அல்லது பாட்டிலை வாங்கும் போது, ஒரு சிறிய தொகை (பொதுவாக 8 முதல் 25 சென்ட் வரை) செலுத்த வேண்டும். இந்த தொகையை நீங்கள் காலியாக உள்ள போத்தல்கள் / கான்களை கடையில் திருப்பி அளிக்கும் போது மீண்டும் பெறுவீர்கள்.

சாதாரணமாக, சூப்பர் மார்கெட் அல்லது குடிநீர் கடையில் காலியான போத்தல்கள் மற்றும் கேன்களுக்கு ஏதுவாக இயந்திரங்கள் உள்ளன. நீங்கள் அங்கே இவற்றை இடும்போது, ஒரு பற்றுச்ச்சீட்டைப்பெறுவீர்கள், அதை காசாளரிடம் அளிக்கவும். பின்னர், உங்கள் பணம் மீண்டும் கிடைக்கும். மீழப்பெறும் பணம் இல்லாத கண்ணாடி பாட்டில்களை கண்ணாடி குப்பைதொட்டியில் போட வேண்டும்.

பிரத்தியேகமான கடைகள் மற்றும் இணையம்

நீங்கள் அலுமாரி, கணினி அல்லது சப்பாத்து போன்றவற்றை உதாரணமாக வாங்க இருப்பின், நீங்கள் அதற்கான பெரிய வர்த்தக கடைகள் அல்லது அதற்கான பிரத்தியேகமான கடைகளில் வாங்க முடியும். பெரிய வர்த்தக கடைகள் அநேகமான நகரங்களில் காணப்படுகின்றன. பிரத்தியேகமாக அமைந்துள்ள கடைகள் குறிப்பிட்ட உற்பத்திப் பொருளிலேயே விசேடமாக காணப்படுவன. உதாரணமாக தளபாடக்கடைகள், இலத்திரனியல் அல்லது பாதணிக்கடைகள் திறக்கப்படும் நேரங்கள் அநேகமாக காலை 9.00 இலிருந்து இரவு 8.00 மணிவரை. ஆனால் சில வேளைகளில் மாலை 6.30 மணிவரைக்கும் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.

பெரும்பாலான பொருட்கள் இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அநேகமாக ஒருசில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். அத்துடன் பொருட்கள் வீட்டிற்கு கொண்டுவந்து தரப்படும்.

பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்குதல்

ஜேர்மனியில், நீங்கள் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் வாங்கலாம், எடுத்துக்காட்டாக ஆடைகள், மின் சாதனங்கள், தளபாடங்கள், புத்தகங்கள் மற்றும் பல. இது பெரும்பாலும் மலிவானது.

வார இறுதிகளில் பெரும்பாலும் பாவித்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் சந்தை நடைபெறும், குறிப்பாக பெரிய நகரங்களில். மேலும் பாவித்தபொருட்களுக்கான கடைகளும் உள்ளன. இணையத்தில் " Flohmarkt " அல்லது " Second Hand " மற்றும் உங்கள் நகரத்தை உள்ளிடவும்.

இணையத்திலும் நீங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட மற்றும் மலிவான பொருட்களைக் காணலாம். ஆனால் அனைத்து சலுகைகளும் நம்பகமானவை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரபலமான இணையத் தளங்கள் எடுத்துக்காட்டாக:

கட்டணம்

ஜேர்மனியில் பல்வேறு பணம் செலுத்தும் முறைகள் பரவலாக உள்ளன. நீங்கள் பணம் அல்லது ஜிரோ கார்ட் (வங்கி இலத்திரனியல் அட்டை) மூலம் சாதாரணமாக எங்கும் பணம் செலுத்தலாம். நீங்கள் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கில் அல்லது ஒரு நடப்புக்கணக்கில் கணக்கு வைத்திருந்தால், உங்களுக்கு ஒரு ஜிரோ கார்ட் அல்லது டெபிட் கார்ட் மற்றும் பெரும்பாலும் ஒரு கிரெடிட் கார்ட் (மாஸ்டர் கார்ட் அல்லது விசா) கிடைக்கும். சில சூப்பர் மார்க்கெட்டுகளில், வாங்கும் மையங்களில் மற்றும் பிரத்தியேக கடைகளில் நீங்கள் உங்கள் கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தலாம். மொபைல் பேமெண்ட், அதாவது ஸ்மார்ட்போனில் பணம் செலுத்துதல், ஜேர்மனியில் பரவலாக உள்ளது.

ஜேர்மனியில் இணையத்தில், நீங்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம், ஆனால் வங்கி கணக்கில் குறைப்பு அல்லது கணக்குப் பற்றுச்சீட்டு மூலம் பணம் செலுத்தலாம். நீங்கள் வங்கி கணக்கில் குறைப்பு மூலம் பணம் செலுத்த விரும்பினால், நீங்கள் உங்கள் கணக்கு தகவல்களை இணையத்தில் கொடுக்க வேண்டும். பின்னர், பணம் உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
ஒரு கணக்குப் பற்றுச்சீட்டு மூலம் செலுத்துவதாயின் , நீங்கள் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை மாற்ற வேண்டும். மேலும், PayPal போன்ற பிற பணம் செலுத்தும் முறைகள் உள்ளன. மேலும் தகவலுக்கு, "பணம் மற்றும் வரிகள்" என்ற தலைப்பில் காணலாம்.

விலை, உத்தரவாதம் மற்றும் மாற்றுதல்

ஜேர்மனியில் அநேகமான கடைகளில் சகல பொருட்களுக்கும் நிரந்தர விலை குறிப்பிடப்பட்டிருக்கும். சந்தை மற்றும் பெரிய வர்த்தகக்கடைகளில் சில வேளைகளில் விலையை பேசித்தீர்க்கலாம். ஆனால் சாதாரணமாக இது வழமையானது அல்ல.

நீங்கள் ஏதாவது பொருளை வாங்கி அதில் ஏதாவது பாதிப்பு உள்ளதா?
இரண்டு வருட சட்ட விதிமுறைகளுக்கமைந்த உத்தரவாதத்தின் மூலம் நீங்கள் உரிமை கோரலாம். அப்பொருளை நீங்கள் திரும்பக்கொடுத்து புதியதொன்றைப் பெறலாம் அல்லது உங்கள் பணம் மீளக்கொடுக்கப்படும் அல்லது நீங்கள் குறைவான தொகையைச் செலுத்தலாம்.
பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கு 12 மாதங்கள். சில நேரங்களில் பொருட்களுக்கு உத்தரவாதம் இருக்கும். உதாரணமாக, ஒரு தொலைக்காட்சி, உத்தரவாத காலத்தில் பழுதடைந்தால், அது இலவசமாக சரிசெய்யப்படும். அல்லது உங்களுக்கு ஒரு புதிய தொலைக்காட்சி கிடைக்கும். உத்தரவாத காலம் முதல் வாங்கிய தேதியிலிருந்து 12-24மாதங்கள் ஆகும்.

உங்களுக்குப் பொருள் பிடிக்கவில்லை என்றால், அதை நீங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை என்றால், அதை வேறு பொருளுடன் மாற்றிக் கொள்ளலாம். பெரும்பாலும் அதைத் திருப்பித் தரவும் முடியும். பின்னர் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். பொருட்களை மாற்றுவது அல்லது திருப்பித் தருவது பெரும்பாலும் 14 நாட்களுக்குள் சாத்தியமாகும். அதற்கு ரசீது அல்லது பற்றுச்சீட்டைக் காட்ட வேண்டும். சிறப்பு சலுகைகளை பெரும்பாலும் மாற்றிக் கொள்ள முடியாது.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

எங்களை பின்தொடருங்கள்