பன்மொழி

Kinderzeichnung © Goethe-Institut/ Simone Schirmer

ஒருவருக்கு பல மொழிகள் சிறப்பாக பேச்சு திறன் இருந்தால், அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழிலிலும் பல சலுகைகள் பெற்று விடுவார். பல மொழி பேசும் மக்கள் பிற கலாச்சாரங்களை பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவர்களிடம் பன்னாட்டு திறன்கள் உள்ளன மற்றும் அவர்கள் பிற கோணங்களை சிறப்பாக புரிந்து கொள்ள முடியும். அவர்கள் சமுதாயத்தில் மேலும் செயல்பட முடியும்.

Audio-Player: Artikel anhören

Artikel anhören

Mehrsprachigkeit

பன்மொழி பேசுவதன் பலன்கள்

ஜேர்மனியில் பல்வேறு நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். மக்கள் தொகையில் 20%க்கு மேல் இதற்குரியவர்கள் உள்ளனர். ஜேர்மனிக்கு வரப்போகும் பலர் ஜேர்மன் மொழியை பரிணாம மொழியாக அல்லது இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்கிறார்கள். ஜேர்மன் மொழி அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் மற்றவர்களுடன் பேச முடியும். அவர்களுக்கு வேலை பெறுவது எளிதாகும். அவர்கள் ஜேர்மனிய கலாச்சாரத்தை மேலும் நன்றாக புரிந்துகொள்ள முடியும். ஆனால், தங்கள் சொந்த மொழியும், அண்டிய மொழியும் முக்கியமாகும்.

ஜேர்மன் மொழியின் பக்க வலிமை

ஜேர்மன் மொழி பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் முக்கியமானது. இதன் மூலம் அவர்கள் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அவர்கள் நண்பர்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். பெரியவர்கள் வேலைக்கு மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஜேர்மன் மொழியைப் பயன்படுத்த வேண்டும், உதாரணமாக கடையில் பொருட்களை வாங்கும்போது அல்லது அதிகாரப்பூர்வ அலுவலகங்களில். ஆனால் பல அதிகாரப்பூர்வ அலுவலகங்களில் பல மொழிகளில் தகவல்களும் உள்ளன. மேலும், மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து உதவி பெற முடியும். அவர்கள் உங்கள் சொந்த மொழியும் ஜேர்மன் மொழியையும் பேசுவார்கள். நீங்கள் எதாவது சொல்ல முடியாவிட்டால் அல்லது புரியவில்லை என்றால், அவர்கள் மொழிபெயர்ப்பு செய்வார்கள் குழந்தைகள் பள்ளிக்காக ஜேர்மன் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மொழி பயிற்சி செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளப்படுகிறது, அதாவது கேட்க, படிக்க, பேச மற்றும் எழுதுவதன் மூலம். பெரியவர்கள் ஒருங்கிணைப்புப்பயிற்சி பாடநெறியை கற்கலாம். மேலதிக தகவலுக்கு எங்கள் "ஒருங்கிணைப்பு பயிற்சிநெறி" என்ற உரையைப் படிக்கவும்.

நீங்கள் மொழியுடன் அதிக தொடர்பு கொள்ள வேண்டும் மற்றும் நிறைய பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஜேர்மன் மொழியை அன்றாடமாக பயன்படுத்த வேண்டும். நாள்தோறும், உதாரணமாக பொருட்கள் வாங்கும்போது, பேசுவது சிறந்தது. ஜேர்மனியர்களுடன் அதிகமாக பேசுங்கள்.

குழந்தைகள் பெரும்பாலும் மற்ற குழந்தைகளுடன் மற்றும் பெரியவர்களுடன் தொடர்பு கொண்டு விளையாடுவதன் மூலம் ஜேர்மன் மொழியை கற்றுக்கொள்கிறார்கள், உதாரணமாக மழலையர் வகுப்புகளில் அல்லது பள்ளியில். இவ்வாறு இந்தக் குழந்தைகள் பல மொழி பேசும் (இரு மொழி) ஆற்றலைப்பெறுகின்றனர். புத்தகங்களை வாசிப்பது ஜேர்மன் மொழி கற்றுக்கொள்ள உதவுகிறது.

மழலையர் பள்ளிகளுக்கான மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. உதாரணமாக, ஜேர்மன்ஆரம்ப பயிற்சி அல்லது ஜேர்மன் சீரமைப்பு பயிற்சி நெறி. ஒரு குழந்தைக்கு ஜேர்மன் மொழி போதுமான அளவு இல்லாதிருந்தால் அதற்கான உதவி கிடைக்கும். மேலும், ஆலோசனைக் கூடங்கள் உள்ளன. அவை ஆலோசனை மற்றும் தகவல்களை வழங்குகின்றன.

தாய்மொழியின் மேம்பாடு

உங்கள் குழந்தைகள் தங்கள் சொந்த மொழியை சிறப்பாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால், அவர்கள் மற்ற மொழிகளை எளிதாக கற்றுக்கொள்ள முடியும். தங்கள் சொந்த மொழியின் மூலம், அவர்கள் தங்கள் சொந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடியும். பல குடும்பங்களில், தாய் மற்றும் தந்தை ஒரே மொழியில் பேசுகிறார்கள். சில குடும்பங்களில் இது வேறுபடுகிறது. அப்படி இருந்தால், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மொழியில் குழந்தைகளுடன் பேச வேண்டும். நீங்கள் குழந்தைகளுக்கு ஒருவழியாக புத்தகங்களை வாசிக்கலாம், பாடல்களைப் பாடலாம் மற்றும் விளையாட்டுகள் செய்யலாம். நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேச முடியும்.

பெரிய நகரங்களில் பெரும்பாலும் (இரு மொழி ) மழலையர் பள்ளிகள் அல்லது சர்வதேச பள்ளிகள் உள்ளன. பல இணைத்தூதரகங்கள் மற்றும் சங்கங்கள் பள்ளி குழந்தைகளுக்காக சொந்த மொழியில் வகுப்புகள் வழங்குகின்றன. குழந்தைகள் தங்கள் சொந்த மொழியில் படித்து எழுத கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் சொந்த நாடுகளின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியங்கள் பற்றி தகவல்கள் பெறுகின்றனர். சில மாநிலங்களில், சாதாரண பள்ளிகளிலும் மொழி மேம்பாட்டுக் கல்வி வழங்கப்படுகிறது. இந்த வகுப்பு "முதன்மை மொழி கூட்டுறவு வகுப்பு" என்று அழைக்கப்படுகிறது.

இணையத்தின் வழியாக பலவகையான திட்டங்களை காணலாம், உதாரணமாக, குழந்தைகள் விளையாட்டு குழுக்கள், விளையாட்டு சங்கங்கள் அல்லது கூட்டு பயணங்கள். இதன் மூலம், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் சொந்த மொழியில் தொடர்பு கொள்ள முடியும்.

பல மொழிகள் கற்றலுக்கான குறிப்புகள்

  • மொழிக்கான நேர்மறையான பார்வை கற்றலுக்கு உதவுகிறது.
  • தந்தை மற்றும் தாய் தங்கள் சொந்த மொழியில் குழந்தைகளுடன் பேச வேண்டும்.
  • வீட்டில் தாய் மொழியில் பேசுங்கள்.
  • குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட மொழி பேச கட்டாயப்படுத்த வேண்டாம். சில நேரங்களில், குழந்தைகள் அதை விரும்பாமல் இருக்கலாம். அப்போது, அவர்கள் விரும்பும் மொழியில் மட்டுமே பேசுவார்கள். இது மறுபடியும் மாறலாம்.
  • சொந்த மொழியை தவிர ஜேர்மன் மொழியையும் மேம்படுத்துங்கள்.
  • ஆலோசனைக் கூடங்கள் உதவி மற்றும் ஆதரவை வழங்குகின்றன. "பன்னாட்டு ஆலோசனைக் கூடம்" அல்லது "பல மொழி ஆலோசனைக் கூடம்" என்று இணையத்தில் தேடுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

எங்களை பின்தொடருங்கள்