வேலை நேரங்கள் உங்கள் தொழிலுக்கும் உங்கள் வேலை ஒப்பந்தத்துக்கும் ஏற்றவாக அமையும். "
வேலை தொடக்கம்" எனும் பகுதியைப்பார்க்கவும் உதாரணமாக, நீங்கள் ஒரு மருத்துவத் தாதி ஆக ஒரு மருத்துவமனையில் பணியாற்றினால், நீங்கள் முறைப்படி நேரங்கள் இல்லாத வேலை நேரங்களில் பணியாற்றுவீர்கள்: சில நேரங்களில் காலை, பிறகு மாலை அல்லது இரவு நேரங்களில் வேலை செய்ய வேண்டும்.
ஒரு அலுவலகத்தில், பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்பட்ட வேலை நேரங்கள் இருக்கும். நீங்கள் காலையில் வேலையைத்தொடங்கி 8 அல்லது 9 மணித்தியாலங்களுக்குப்பிறகு வேலையை முடிப்பீர்கள் அலுவலகங்களில் பெரும்பாலும் இளக்கமான வேலை நேரம் இருக்கும், அதாவது, உங்களுக்கு நேரத்தை தனிப்பட்ட முறையில் அமைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் காலை 8 அல்லது 9 மணிக்கு தொடங்கி, பிறகு எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். ஒவ்வொரு பணியிடத்திலும், உங்களுக்கு குறைந்தது ஒரு இடைவேளை இருக்கும், இது பெரும்பாலும் 30 அல்லது 60 நிமிடங்களுக்கு ஒரு மதிய இடைவேளை. அதிகம் தொழில் வழங்குனர் இப்போது நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை (Home office) அனுமதிக்கின்றனர். பொதுவாக, ஒருவர் 38௪0 மணி நேரம் ஒரு வாரத்தில் வேலை செய்கிறார். மேலும், பாதி நேர வேலை செய்யும் வாய்ப்பு (குறிப்பாக, 50%) உள்ளது, இது வாரத்திற்கு சுமார் 20 மணி நேரம் ஆகும். உங்கள் குடும்பம் இருந்தால் அல்லது நீங்கள் ஒரு சுய தொழிலையும் செய்பவராக இருந்தால், இது ஒரு வாய்ப்பு ஆகும்.
ஜேர்மனியில் ஒரு குறைந்தபட்ச ஊதியமாக ஒரு பணியாளருக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 12.41 யூரோ க்கு குறைவாக பணம் வழங்க முடியாது (2024 இன் நிலவரப்படி).
ஒவ்வொரு பணியாளருக்கும் ஒரு வருடத்திற்கு குறிப்பிட்ட விடுமுறை நாட்கள் உள்ளன. நீங்கள் விடுமுறையை தகுதி க்கேற்றபடிகோர வேண்டும், அதற்காக உங்கள் மேலாளர் ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் விடுமுறை நாட்களை வருடத்தின் முழுவதும் பரவலாக எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் நீங்கள் விரும்பும் போது விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சில நேரங்களில், மிகவும் வேலை அதிகமாக உள்ள நாட்களில் விடுமுறை எடுக்க முடியாது. சில நேரங்களில், நீங்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், ஏனெனில் சில வேளைகளில் முழு நிறுவனமும் விடுமுறையில் உள்ள போது நீங்களும் விடுமுறையில் செல்ல நேரிடும். விடுமுறை எடுத்தாலும், உங்கள் சம்பளம் அல்லது ஊதியம் தொடர்ந்து கிடைக்கும்.
நீங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தால், நீங்கள் உங்கள் நிறுவனத்திற்கு உடனே தெரியப்படுத்தி, நோயின் தகவலை அறிவிக்க வேண்டும். இதை நோய்க் குறிப்பு என்று கூறப்படுகிறது. பெரும்பாலும், ஒரு பணியாளருக்கு 3 நாட்கள் நோய் விடுமுறை உண்டு . (நான்காவது நாளில் மருத்துவ சான்றிதழ் தேவை). சில நேரங்களில், தொழில் வழங்குனர் இந்த சான்றிதழை எவ்வளவு விரைவில் பெறவேண்டும் என்பதை முன்பே கூறலாம். நீங்கள் மருத்துவரிடம் செல்லவோ அல்லது தொலைபேசியில் நோயைப்பற்றி தெரிவிக்கலாம். அதிகமான சமயங்களில், உங்கள் மருத்துவர் தொலைபேசியில் உங்கள் நோயைப்பற்றி அறிந்து உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவலை அனுப்புவார். உங்கள் உடல்நலக்காப்புறுதி அதனை இணைய வழியில் பார்க்க முடியும். இது சட்டப்பூர்வமான மருத்துவ காப்பீட்டினை உள்ளவர்களுக்கே பொருந்தும். தனியார் காப்பீட்டுடன் இருப்பின், நீங்கள் மருத்திவச் சான்றிதழை காகித வடிவத்தில் பெற வேண்டும். இதை நீங்கள் தானாகச் சமர்ப்பிக்க வேண்டும்.